Duplicate ration card : ஏழை எளிய மக்கள் பயன் அடைந்து வரும் வகையில், தமிழகத்தில் நியாயவிலைக்கடைகளில் உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவ கையில் அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்படுகிறது. இது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சார்பாக வேட்டி, சேலை, பணம் உள்ளிட்ட பரிசு பொருட்களும் வழங்கப்படுகிறது. மேலும் இயற்கை பேரிடர் பாதிப்பின் போது ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு மட்டுமே இழப்பீடு வழங்கப்படுகிறது.
tamilnadu ration card
ரேஷன் கார்டின் பயன்கள்
இது மட்டுமில்லாமல் தமிழக அரசின் வெற்றிகரமான திட்டமாக இருப்பது மகளிர் உரிமை தொகுயாகும். மாதந்தோறும் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த திட்டத்தில் பயன் பெற ரேஷன் கார்டு கட்டாயம். எனவே இந்த திட்டத்தில் இணைவதற்காகவே 3 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். அந்த வகையில் தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 19 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.
tamilnadu ration card
நகல் ரேஷன் கார்டு பெற வழிமுறை என்ன.?
எனவே தமிழ்நாட்டில் 37 ஆயிரம் முழு நேரம் மற்றும் பகுதி நேர நியாயவிலைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இதி்ல் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளதாக கூறினார். இந்த சூழ்நிலையில் குடும்ப அட்டை தொலைந்தால் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு பொதுமக்கள் அலைய வேண்டிய நிலை உள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களுக்கு உடனடியாக புதிய குடும்ப அட்டை கிடைக்க எளிமையான வழியை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Duplicate ration card online
50 ரூபாய் கட்டினால் வீடு தேடி வரும் ரேஷன் கார்டு
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அவர், குடும்ப அட்டை தொலைந்து விட்டால் வட்டாச்சியர் அலுவலகத்திற்கும், மாநகராட்சியில் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக காலம் விரயம் ஆகும், விண்ணப்பத்திற்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் புதிய அட்டை வந்துவிட்டதா என்று பார்ப்பதற்கு இரண்டு அல்லது 3 முறை வட்டாச்சியர் அலுவலகத்திற்கு அலைய வேண்டும்.
Apply new ration card
எளிமையான வழியை அறிவித்த தமிழக அரசு
எனவே தொலைந்து போன அட்டைக்கு பதிலாக நகல் அட்டையை ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான திட்டத்தை தொடங்கிவைக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் 50 ரூபாய் பணம் கட்டினால் அஞ்சல் துறை மூலமாக வீடுகளுக்கே அந்த அட்டையானவது வந்து சேரும். இந்த திட்டத்தின் மூலமாக 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைந்து போன அட்டைக்கு பதிலாக புதிய அட்டையை பெற்றுள்ளனர் என கூறினார்.