விவசாயிகளுக்கு ஒரே நாளில் பயிர் கடன்.! கொத்து கொத்தாக அறிவிப்பை அள்ளிக்கொடுத்த தமிழக அரசு

தமிழக சட்டமன்றத்தில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையில் புதிய கடன் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பயிர் கடன், நிலம் வாங்க கடன், மகளிருக்கு மின்சார ஆட்டோ வாங்க கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

Tamil Nadu government new announcement on crop loans for farmers KAK

Tamil Nadu Government Cooperative Department Announcements : தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் , பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் படி, கடன் உதவி திட்டங்கள், பயிர் கடன், நிலம் வாங்க கடன், மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. 

விவசாயிகளுக்காக கூட்டுறவுத்துறை அறிவிப்புகள்

1. கூட்டுறவு நிறுவனங்களின் வாயிலாக ஒரு இலட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாய் கடன் உதவி வழங்கப்படும்

2. தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் பயிர்க்கடன் விண்ணப்பித்த அன்றே வழங்கப்படும்

3. நிலமற்ற ஏழை எளிய பெண் விவசாயத் தொழிலாளர்கள் விவசாய நிலம்  வாங்குவதற்கு ரூபாய் ஐந்து இலட்சம் வரை கடன் வழங்கப்படும்

4. விவசாயிகளின் விளை பொருட்களைச் சேமித்துப் பதப்படுத்தவும், மதிப்புக் கூட்டி விற்பனை செய்யவும் ஏதுவாகக் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகக் கடனுதவி வழங்கப்படும்


மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ

5. பொருளாதாரத்தில் பின்தங்கிய ஆயிரம் மகளிருக்கு மின்சாரத்தில் இயங்கும் ஆட்டோ கொள்முதல் செய்வதற்கு தலா மூன்று  இலட்சம் ரூபாய் வரை கடன் உதவி வழங்கப்படும்

6. கூட்டுறவு வங்கிகளின் வாடிக்கையாளர்களுக்கு இணைய வழி சேமிப்புக் கணக்கு தொடங்குதல், கடன் அட்டை வழங்குதல், கைபேசி வங்கிச் சேவை முதலிய சேவைகள் வழங்கப்படும்

7.  வசிப்பிடத்திற்கு அருகிலேயே விவசாயிகளுக்குத் தேவையான சேவைகளை வழங்கிட ஐந்து தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களின் கிளைகள் தொடங்கப்படும்

கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய கட்டிடம்

8.  70 இலட்சம் மதிப்பீட்டில் விவசாயிகளிடமிருந்து பெறும் விளைபொருட்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் வண்ணம் இரண்டு வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் நவீனமயமாக்கப்படும்.

9.விரைவு வணிகம் (Quick Commerce) வாயிலாக நுகர்வுப் பொருட்கள் பொதுமக்களின் வீட்டிற்கே விநியோகம் செய்யப்படும்

10. 6 கோடியே 25 இலட்சம் மதிப்பீட்டில் சிவகங்கை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் விழுப்புரம் ஆகிய ஐந்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பத்து கிளைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்

நியாய விலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ்

11.  3 கோடியே 35 இலட்சம் மதிப்பீட்டில்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் தலைமையகம் நவீனமயமாக்கப்படும்.

12.  3 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கிளைகள்  நவீனமயமாக்கப்படும்

13. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் 2500 நியாய விலைக் கடைகள் பொலிவூட்டப்படும்

14. கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 5000 நியாய விலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் பெறப்படும்

15. ரூபாய் எட்டு கோடி மதிப்பீட்டில் சென்னை தீவுத்திடலில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகம் கட்டப்படும்

Latest Videos

vuukle one pixel image
click me!