போய் வாருங்கள் அப்பா! உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்! தமிழிசை கண்ணீர் மல்க இரங்கல்!

Published : Apr 09, 2025, 07:39 AM ISTUpdated : Apr 09, 2025, 07:54 AM IST

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழிசை சௌந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

PREV
14
போய் வாருங்கள் அப்பா! உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்!  தமிழிசை கண்ணீர் மல்க இரங்கல்!
Kumari Ananthan passes away

குமரி அனந்தன் மறைவு

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான தமிழிசையின் தந்தையுமான குமரி அனந்தன் (93) வயது மூப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நள்ளிரவு காலனாமார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை சாலை கிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

24
tamilisai soundararajan

தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல்

இந்நிலையில் தந்தை குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவரது மகளும் பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சவுந்தரராஜன்: தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை. தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் என்று பெருமையாக பேச வைத்த என் தந்தை குமரி அனந்தன் அவர்கள் இன்று என் அம்மாவோடு  இரண்டர கலந்து விட்டார்  குமரியில் ஒரு கிராமத்தில் பிறந்து தன் முழு முயற்சியினால் அப்பழுக்கற்ற அரசியல்வாதியாக தமிழ் மீது தீராத பற்று கொண்டு தமிழிசை என்ற பெயர் வைத்து இசை இசை என்று கூப்பிடும் என் அப்பாவின் கணீர் குரல் இன்று காற்றில் இசையோடு கலந்து விட்டது வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்று சீரான வாழ்க்கை வாழ்ந்தவர் இன்று தான் வளர்த்தவர்கள் எல்லாம் சீராக வாழ்வதைக் கண்டு பெருமைப்பட்டு வாழ்த்திவிட்டு எங்களை விட்டு மறைந்திருக்கிறார் என்றும் அவர் பெயர் நிலைத்திருக்கும். 

34
tamilisai soundararajan Vs Kumari Ananthan

போய் வாருங்கள் அப்பா

தமிழக  அரசியலில் பாராளுமன்றத்தில் முதன் முதலில் தமிழில் பேசியவர்  இன்று தமிழோடு காற்றில்  கலந்துவிட்டார் என்று சொல்ல வேண்டும் மகிழ்ச்சியோடு போய் வாருங்கள் அப்பா நீங்கள் மக்களுக்கு என்ன எல்லாம் செய்ய வேண்டும் என்று  நினைத்தீர்களோ அதை மனதில் கொண்டு உங்கள் பெயரில் நாங்கள் செய்வோம் என்று உறுதியோடு உங்களை வழி அனுப்புகிறோம். 

இதையும் படிங்க: குமரி அனந்தன் காலமானார்: யார் இவர்.? அரசியலில் சாதித்தது என்ன.?

44
bjp tamilisai

உங்கள் ஆசையை நிறைவேற்றுவோம்

உங்கள் வழி உங்கள் வழியில் நீங்கள் எப்பொழுதும் சொல்வதைப் போல நாமும் மகிழ்ச்சியாக இருந்து மற்றவர்களின் மகிழ்விக்க வேண்டும் என்று உங்கள் ஆசை ஆசையை எப்போதும் நிறைவேற்றுவோம் போய் வாருங்கள் அப்பா தமிழ் கற்றதனால் நான் தமிழ் பேசவில்லை தமிழ் என்னைப் பெற்றதனால் நான் தமிழ் பேசுகிறேன் நன்றி அப்பா மகிழ்ச்சியோடு  போய் வாருங்கள் என பதிவிட்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories