School and college Continuous holiday : சொந்த ஊரில் உரிய வேலை கிடைக்காத காரணத்தால் வெளியூர்களுக்கு வேலை தேடி லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். இந்த நிலையிலை வெளியூரில் வேலை பார்ப்பவர்களுக்கு தொடர் விடுமுறை கிடைத்தால் சொந்த ஊருக்கு பறந்து விடுவார்கள். அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறையானது கிடைக்கவுள்ளது.
இதன் படி நாளை வியாழக்கிழமை மஹாவீர் ஜெயந்தி அரசு விடுமுறை, இதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் விடுமுறை எடுத்தால், அதனை தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை, திங்கட் கிழமை தமிழ் புத்தாண்டு விடுமுறை என தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.
School holiday special bus
சிறப்பு பேருந்து இயக்கம்
எனவே இந்த தொடர் விடுமுறையை பயன்படுத்தி சுற்றுலா மற்றும் வெளியூருக்கு புறப்பட பொதுமக்கள் திட்டமிட்டுள்ளனர். எனவே பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் சிறப்பு பேருந்து தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாளை (10/04/2025 (வியாழக்கிழமை மஹாவீர் ஜெயந்தி) நாளை மறுதினம் (11/04/2025 வெள்ளிக் கிழமை) 12/04/2025 (சனிக்கிழமை), 13/04/2025 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 14/04/2025 அன்று தமிழ் புத்தாண்டு தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/04/2025, 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
koyambedu special bus
கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பேருந்து
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி, சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 09/04/2025 (புதன் கிழமை) அன்று 50 பேருந்துகளும் 11/04/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 100 பேருந்துகளும் மற்றும் 12/04/2025 (சனிக்கிழமை) அன்று 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
kilambakkam bus
கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி. தூத்துக்குடி. கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 09/04/2025 (புதன் கிழமை) அன்று 190 பேருந்துகளும், 11/04/2025 (வெள்ளிக் கிழமை) அன்று 525 பேருந்துகளும் மற்றும் 12/04/2025 (சனிக்கிழமை) அன்று 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாதாவரத்திலிருந்து 09/04/2025 அன்று 20 சிறப்பு பேருந்துகளும், 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
tamil new year special bus
சொந்த ஊர்களுக்கு திரும்ப சிறப்பு பேருந்து
இது மட்டுமில்லாமல் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல விடுமுறை முடிந்து சொந்த ஊர் மற்றும் பணி செய்யும் இடங்களுக்கு திரும்பிடும் வகையில், 14.04.2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
Bus ticket reservation
முன்பதிவு செய்து பயணியுங்கள்
இந்நிலையில், புதன்கிழமை அன்று 10,065 பயணிகளும், வெள்ளிக்கிழமை அன்று 14.898 பயணிகளும். சனிக்கிழமை அன்று 8,278 பயணிகளும் மற்றும் திங்கள் அன்று 12,399 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.