ரொம்ப குறைந்த வட்டியில் 10ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் கடன்.! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

First Published | Dec 6, 2024, 8:54 AM IST

Small Business Loan Camp In Tamilnadu : கந்து வட்டிக்கு கடன் வாங்கி மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு உதவிடும் வகையில் ரொம்ப கம்மி வட்டியில் தமிழக அரசு கடன் உதவி திட்டத்தை அறிவித்துள்ளது. 

Small business loan

கந்துவட்டியால் பொதுமக்கள் பாதிப்பு

சொந்த தொழில் செய்ய வேண்டும், கல்வி கட்டணம் கட்ட வேண்டும்,  மருத்து செலவிற்கு அவசர பணம் தேவை போன்ற காரணங்களால் ஏழை, எளிய மக்கள் கந்து வட்டிக்கு பணத்தை கடனாக வாங்குகின்றன்னர். இதனால் மாதந்தோறும் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் முழுவதும் வட்டிக்கே செலவளிக்கும் நிலை உள்ளது.

இதனால் மீண்டும் மீண்டும் கடன் வாங்கி குடும்பத்தோடு பாதிக்கப்படும் நிலை உருவாகும். ஒரு கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வும் நடைபெறும். இதனால் பாதிக்கப்படும் சிறுவணிகர்களுக்கு தமிழக அரசின் கூட்டுறவுத்துறை மூலம் கம்மி வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது.

heavy rain in tamilnadu

வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையையொட்டி ஏற்பட்ட ஃபெஞ்சல் புயலால் பல மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. குறிப்பாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வீடுகள், பயிர்கள், வணிக நிறுவனங்கள், சிறு வணிகர்களின் கடைகள் என அனைத்தும் வெள்ளத்தால் மூழ்கியது. இந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர ஏழை, எளிய மக்களுக்கு பல வருடங்கள் ஆகும்,

இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக இழப்பீடு தொகையாக வெள்ளம் பாதித்த மக்களுக்கு 2ஆயிரம் ரூபாய் அறிவித்துள்ளது. மேலும் வீடு, கால்நடைகள், பயிர்களுக்கும் இழப்பீடு தொகை தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Tap to resize

cooperative bank loan

வணிகர்களுக்கு சிறு வணிக கடன்

இந்தநிலையில்  கூட்டுறவுத்துறையின் மூலம் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட சிறுவணிகர்களுக்கு சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம் நடைபெறவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் படி தமிழ்நாட்டில் நவம்பர் 30ஆம் தேதி வீசிய "ஃபெஞ்சல்" புயல் காரணமாக தமிழ்நாட்டின் வட மாவட்டங்களில் பரவலான மற்றூம் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம். கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வழக்கத்தை விட அதிக மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

Small business loan

ஒரு லட்சம் ரூபாய் வரை கடன் உதவி

இதன் காரணமாக சிறுவணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகள் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனையடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" மூலம் முகாம் அமைத்து கடன் வழங்கப்படவுள்ளது. கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் 10,000 முதல் 1 இலட்சம் வரை சிறுவணிகக்கடன் வழங்கப்படவுள்ளது.

Cyclone damage assistance

 யாருக்கெல்லாம் கடன் உதவி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள், தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த அட்டை உடைய தெருவியாபாரிகள், சிறு வணிகர்கள், வணிக உபயோகத்திற்காக மின் இணைப்பு பெற்ற சிறு கடை வியாபாரிகள், தெருவோரங்களில் வியாபாரம் செய்யும் பூ வியாபாரிகள், காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்பவர்கள், சாலையோர உணவகங்கள் நடத்துபவர்கள். 

Small Business Loan Camp

சிறு வணிக கடன் முகாம் தேதி என்ன.?

கைவினைஞர்கள். மீனவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் (புயலால் பழுதடைந்த ஆட்டோவினை சீரமைக்க), அமைப்புசாரா தொழிலாளர்கள், நடைபாதையில் கடை வைத்திருப்பவர்கள் ஆகிய சிறு வணிகர்கள்/சிறு, குறு தொழில் முனைவோர்கள் இத்திட்டத்தின் மூலம் கடன் பெற தகுதியானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம்கள் மேற்கண்ட மாவட்டங்களில் 06.12.2024 முதல் 12.12.2024 வரை நடைபெறவுள்ளது.  இந்த "சிறப்பு சிறு வணிகக் கடன் திட்டம்" முகாம்களில் சிறுவணிகர்கள் உரிய ஆவணங்கள் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு  கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.

Latest Videos

click me!