மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ஜாக்பாட்.! அள்ளிக்கொடுக்கப்படும் கடன் - தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Published : Jul 21, 2025, 11:56 AM IST

தமிழ்நாடு அரசு, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டிற்காக சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கி வருகிறது. 2021-2025 வரை சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1,21,415.40 கோடி வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.

PREV
13
மகளிர் சுய உதவிக்குழுவிற்கான கடன் திட்டம்

தமிழ்நாடு அரசு, மகளிரின் சமூக பொருளாதார மேம்பாட்டை உள்ளடக்கிய செயல்பாட்டினையே முதன்மை நோக்கமாகக் கொண்டு அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் என்ற ஒரு தனி நிறுவனத்தை தொடங்கியதன் மூலம் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. 

சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, அவைகளின் தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

23
மகளிர் சுய உதவிக்குழுவிற்கு கடன்

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021-2022ஆம் நிதி ஆண்டில் 4,08,740 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.21,392.52 கோடி, 2022-2023ஆம் நிதி ஆண்டில் 4,49,209 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.25,642.01 கோடி, 2023-2024ஆம் நிதி ஆண்டில் 4,79,350 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 30,074.76 கோடி, 2024-2025ஆம் நிதி ஆண்டில் 4,84,659 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 35,189.87 கோடி வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது

33
1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு

2025-2026ஆம் ஆண்டிற்கான நிதிநிலையறிக்கையில், சுய உதவிக் குழு மகளிருக்கு 37 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்க, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, 18.07.2025 வரை 1,04,538 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 13,58,994 உறுப்பினர்களுக்கு 9,113.24 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசு பொறுப்பேற்ற நான்காண்டுகளில் 19,26,496 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 சுய உதவிக் குழு மகளிருக்கு 1,21,415.40 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு வழங்கி சாதனை படைத்து, சுய உதவிக் குழுக்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வருகிறது என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories