கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது திமுக 505 தேர்தல் வாக்குறுதிகளில் அள்ளி வீசியது. அதில், அனைத்து தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 4-ம் குறைக்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 100 மானியம் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தனர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகளாகியும் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.