சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய விசிக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், “வெறும் 2 சீட்டுக்காக திமுக.வுடன் கூட்டணி அமைத்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. நான் பெரியாரைப் படித்தவன் என்பதால் என்னை சாதி தலைவர் என்று சொல்கின்றனர். பெரியாரைப் படித்தவன் என்பதால் நான் திமுகவை ஆதரிக்கின்றேன். திமுக.விடம் அந்த ஓரிரு சீட்டுகளை கூட வாங்க முடியாத நிலையில் தான் நீங்கள் இருக்கிறீர்கள்” என்றார்.
24
அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தற்போதைய அரசியல் சூழலில் அதிமுக சுதந்திரமாக செயல்படவில்லை, அதன் தலைவர்களும் உண்மையாக செயல்பட முடியவி்ல்லை. அதிமுக.வில் ஒரு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றால் அதற்கு பாஜக தான் காரணம். அதிமுக மீது எனக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.
34
பாஜகவின் திட்டத்தை புரிந்துகொள்ளுங்கள்
தமிழக அரசியலில் திராவிட இயக்கத்தை பலவீனப்படுத்தினால் பாஜகவை வளர்த்துவிட முடியும் என்று நினைக்கின்றனர். இதனை புரிந்துகொண்டு அதிமுக தலைவர்கள் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது.
சசிகலா அம்மையார் செயல்படாமல் போனதற்கு யார் காரணம்? பன்னீர்செல்வம் தனித்து விடப்பட்டதற்கு யார் காரணம்? டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்க யார் காரணம்? செங்கோட்டையன் அதிமுக தலைமைக்கு எதிராக பேசும் அளவிற்கு தூண்டி விட்டது யார் என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் பாஜக தான்” என்று தெரிவித்துள்ளார்.