துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் திடீர் திருப்பம்! உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

Published : Sep 23, 2025, 08:31 AM IST

Duraimurugan Disproportionate Assets Case: அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கில், மறுவிசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.  

PREV
14
சொத்து குவிப்பு வழக்கு

தமிழ்நாட்டின் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மீது, வருமானத்துக்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது கடந்த 2006-11 திமுக ஆட்​சி​யில் பொதுப்​பணித் துறை அமைச்​ச​ராக துரைமுருகன் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.40 கோடி சொத்து குவித்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு எதிராக வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கடந்த 2011ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த வேலூர் முதன்மை அமர்வு நீதி​மன்​றம் துரைமுருகன் மற்றும் அவரது மனைவியை விடுவித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத் துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

24
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அமைச்சர் துரைமுருகன் மற்றும் அவருடைய மனைவி ஆகிய இருவரையும் விடுவித்த வேலூர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்தது. இந்த வழக்கை தினமும் என்ற அடிப்​படை​யில் மீண்​டும் மறு​வி​சா​ரணை நடத்தி 6 மாதங்​களுக்​குள் விசா​ரித்து முடிக்க வேண்​டும் என்று கடந்த ஏப்​ரல் மாதம் உத்​தர​விட்​டது.

34
உச்சநீதிமன்றத்தில் முறையீடு

மேலும் இந்த வழக்கை வேலூருக்கு மாற்ற வேண்டும் என்று துரைமுருகன் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் தன்னை விடுவித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து துரைமுருகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஏ.ஜி.மாஷி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்​போது துரைமுருகன் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி மற்றும் வில்சன் ஆகியோர் வாதிட்டனர்.

44
துரை​முரு​கன்

இது அரசி​யல் உள்​நோக்​கம் கொண்​டது. மேலும், அமைச்​சர் என்ற முறை​யில் துரை​முரு​கன் மீது வழக்கு பதிவு செய்​ய​வும், குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​ய​வும் ஆளுநரிடம்​தான் அனு​மதி பெற்​றிருக்க வேண்​டும். ஆனால், சட்​டப்​பேரவை தலை​வரிடம் அனு​மதி பெற்​றுள்​ளனர். இதை எல்​லாம் கருத்​தில் கொண்​டு​தான் வழக்​கில் இருந்து இரு​வரை​யும் வேலூர் சிறப்பு நீதி​மன்​றம் விடு​வித்​தது. உயர் நீதி​மன்​றம் அந்த தீர்ப்பை ரத்து செய்​து, மறு​வி​சா​ரணைக்கு உத்​தர​விட்​டுள்​ளது. எனவே, உயர் நீதி​மன்ற உத்​தர​வுக்கு தடை விதிக்க வேண்​டும் என வாதிடப்பட்டது. இதையடுத்​து, துரை​முரு​கன், சாந்​தகு​மாரிக்கு எதி​ரான சொத்​துக் குவிப்பு வழக்​கின் மறு​வி​சா​ரணைக்கு நீதிப​தி​கள் இடைக்​காலத் தடை வி​தித்து உத்தரவிட்டனர். மேலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை பதில் அளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Read more Photos on
click me!

Recommended Stories