தினமும் 800 ரூபாய் ஊதியம்.! 50 ஆயிரம் பேருக்கு அசத்தலான திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு

Published : Sep 23, 2025, 08:21 AM IST

தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உயர்த்தும் நோக்கில், தமிழக அரசு பதிவு பெற்ற 50,000 கட்டுமானத் தொழிலாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியை தொடங்கியுள்ளது. ரூ.45.21 கோடி செலவில் வழங்கப்படும் 

PREV
14
தமிழகத்தில் தொழில் வளர்ச்சி

தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தொழில் முன்னேற்றத்திற்காக தொழிலாளர்களுக்கு பயிற்சியும் வழங்கி வேலைவாய்ப்பையும் உருவாக்கி கொடுத்து வருகிறது. அதன் படி, 2030-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் டாலராக உருவாக வேண்டும் என பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

 பொருளாதார வளர்ச்சியில் மனித வளத்தின் திறன் மேம்பாடு மிகவும் அவசியம் என்பதால், தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கட்டுமானம். கம்பி வளைப்பு, தச்சு. மின்பணியாளர், பிளம்பர். வெல்டர், பிளாக் ஸ்மித், வர்ணம் பூசுதல்,

24
50ஆயிரம் தொழிலாளர்களுக்கு பயிற்சி

ஏசி மெக்கானிக் கண்ணாடி அமைத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட தொழில் இனங்களில் அவர்களது திறனை மேம்படுத்த ஏழு நாட்கள் திறன் மேம்பாட்டு பயிற்சியினை கிண்டி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள பயிற்சி மையத்தில் (22.09.2025) தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி. வி. கணேசன் துவக்கி வைத்தார்.

34
தினமும் 800 ரூபாய் ஊதியம்

இத்திட்டத்தின் கீழ் 50000 தொழிலாளர்கள் பயன் பெற ஏதுவாக தெரிவு செய்யப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் முன்னணி பயிற்சி நிறுவனங்கள் மூலம் ரூ.45.21 கோடி செலவில் பயிற்சி வழங்கப்படவுள்ளது. பயிற்சியின் போது ஒவ்வொரு தொழிலாளிக்கும் நாளொன்றுக்கு கூலி ரூ.800/- வீதம் பயிற்சி காலத்திற்கு ரூ.5600/-வழங்கப்படும்.

44
பயிற்சியால் பயன்

இப்பயிற்சியின் மூலம் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு புதிய தொழில் நுட்பங்கள். டிஜிட்டல் அளவிடும் கருவிகள் பயன்பாடு. சுயதொழில் வாய்ப்பு, பணியிட பாதுகாப்பு மற்றும் உடல் நலன் பேணுதல் போன்ற பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன. 

இப்பயிற்சிகளைப் பெறுவதன் மூலம் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களது திறனையும் தொழில் தரத்தையும் மேம்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.  

Read more Photos on
click me!

Recommended Stories