TN Register Offices: சர்ப்ரைஸ் செய்தி! தமிழக சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு உத்தரவு! குஷியில் பொதுமக்கள்!

First Published | Sep 14, 2024, 11:27 AM IST

Tamilnadu Register Offices:தமிழகத்தில் ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான செப்டம்பர் 16ம் தேதி அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால், கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும். 

மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றைக்கும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல நாடு முழுவதும் தங்கத்தின் மீது  அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர். அதேபோல் காலி மனைகளையும் அதிகளவில் வாங்குகின்றனர். குறிப்பாக தமிழக மக்கள் அதிகளவிலேயே இதை இரண்டையும் வாங்கி குவிக்கின்றனர். இதன் காரணமாகவே தங்கம் மற்றும் காலி மனையின் மீதான விலையும் நாளுக்கு நாள் ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இதையும் படிங்க: School Teacher: ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்! பதவி உயர்வு குறித்து வெளியான முக்கிய தகவல்! 

குறிப்பாக சென்னையில் ஒரு சதுர அடி நிலம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னையின் முக்கிய பகுதியில் ஒரு சதுர அடி 10,000 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் புறநகர் பகுதிகளான செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர் போன்ற பகுதிகளிலும் நிலத்தின் மதிப்பு அதிகரித்துள்ளது. இந்த பகுதிகளிலேயே ஒரு சதுர அடி 3000 ரூபாய் அளவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எப்படியாவது சொந்த இடம் வாங்கி வீடு கட்டி விட வேண்டும் என்பது பொதுமக்களின் கனவாக இருந்து வருகிறது. 

Tap to resize

இடம் மற்றும் காலி மனைகளை வாங்கும் போது நல்ல நாட்கள் சுபமுகூர்த்த நாட்கள் பார்த்து வாங்குவது வழக்கம். அதற்காக பொதுமக்கள் தாங்கள் விரும்பும்நாளில், விரும்பும் நேரத்தில் பதிவு மேற்கொள்ளும் வகையில் டோக்கன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு சார்பதிவாளர் அலுவலகத்துக்கும் தினமும் 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. 2 சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகத்துக்கு 200 டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தமட்டில் சுபமுகூர்த்த தினங்களில் அதிகளவில் பத்திரப்பதிவு என்பது நடக்கும். அதன்படி ஒவ்வொரு சுபமுகூர்த்த தினகங்களிலும் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த  தினத்தை முன்னிட்டு சார்பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக பத்திரப்பதிவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்வது வழக்கம். தற்போது ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான 16ம் தேதியன்று அதிகளவில் பத்திரப் பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:  School Education Department: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு!

இதனை ஏற்று ஆவணி மாதத்தின் கடைசி சுபமுகூர்த்த தினமான செப்டம்பர் 16ம் தேதியன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளுக்கு கூடுதலாக வில்லைகளும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் 4 தட்கல் முன்பதிவு பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிட்டுள்ளது. 

Latest Videos

click me!