இதுகுறித்து ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரகம் சார்பில் மாவட்ட அலுவலர்களுக்கு இன்று அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்: ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் 50 சதவீத பணியிடங்களில் 2 பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை கொண்டு நிரப்பும் பொருட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையைச் சார்ந்த அமைச்சுப் பணியாளர்களுக்கு 2021ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி முதல் முதுகலைப்பட்டதாரி ஆசிரியராக பணிமாறுதல் பதவி உயர்வு வழங்க தேர்ந்தோர் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: School Education Department: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை போட்ட முக்கிய உத்தரவு!
இந்நேர்வில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்களில் பார்வை 2-இல் கண்டுள்ள அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி முதுநிலை பட்டதாரி ஆசிரியருக்கான (ஒரே பாடப்பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியாளருக்கான (UG and PG Same Degree with B.Ed.)கல்வி தகுதியும் விருப்பமும் உடைய பணியாளர்களின் விவரத்தினை 24ம் தேதிக்குள் இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.