school holiday
பள்ளிகளுக்கு விடுமுறை- மாணவர்கள் கொண்டாட்டம்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வந்தாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 12 நாட்கள் விடுமுறை கிடைத்த நிலையில், இந்த மாதமான செப்டம்பர் மாதமும் 10 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. குறிப்பாக விநாயகர் சதூர்த்தி மற்றும் மிலாது நபி பண்டிகையையொட்டி கூடுதல் அரசு விடுமுறை கிடைத்துள்ளது. இந்தநிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்தாண்டு பள்ளிகள் செயல்படும் நாட்கள் தொடர்பாக நாட்காட்டி வெளியிடப்பட்டது. இதன் படி 220 நாட்கள் பள்ளி நாட்களில் இருந்து 210 நாட்களாக குறைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது
டிஎன்பிஎஸ்சி தேர்வு
அந்த நாட்காட்டியில் செப்டம்பர் 14ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வு நாளை செப்டம்பர் 14ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் நேரடி நியமனத்திற்கு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு- II (தொகுதி-II & II A பணிகள்)- இல் அடங்கிய பதவிகளுக்கான கொள்குறிவகை (OMR முறை) முதனிலைத் தேர்வு வரும் செப் 14ம் தேதியன்று முற்பகல் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
school holiday
பள்ளி வளாகத்தில் தேர்வு
இத்தேர்வினை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 விண்ணப்பதாரர்கள் எழுதவுள்ளனர். இவர்களுக்காக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 2ஆயிரத்து 763 தேர்வு மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த அரசு பணியாளர் இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
School holiday
செப்டம்பர் 14 ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை
இதனிடையே இந்த தேர்வுகள் நாளை தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடைபெறவுள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிதாக வெளியிடப்பட்ட திருத்திய நாள்காட்டி பட்டியலின் படி பள்ளிகள் நாளை செயல்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் செயல்படுமா என கேள்வி எழுந்திருந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் குழப்பத்தில் இருந்தனர்.
இந்தநிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வுகள் பள்ளி வளாகத்தில் நடைபெறவுள்ளதால் பள்ளிகளுக்கு நாளை செப்டம்பர் 14ஆம் தேதி விடுமுறை அறிவித்து உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் இந்த உத்தரவால் மாணவர்கள் உற்சாகமடைந்துள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமை மிலாது நபி விடுமுறை என தொடர்ந்து கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு தயாராகியுள்ளனர்.