இன்று இரவு முதல் காற்றழுத்த தாழ்வு காரணமாக தென் தமிழகத்தில் மழை அதிகரிக்கும். டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில், குமரிக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மேற்கு நோக்கி அரபிக்கடலுக்கு நகரும் போது, தென் தமிழகத்தில் மிக கனமழை ஏற்படும். தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், தேனி, குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.