செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ். இவர் தாம்பரம் மாநகரப் போக்குவரத்து பணிமனை கழகத்தில் JEஆக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி கழுத்து வலி காரணமாக பணிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக தாம்பரம் பணிமனை கிளை மேலாளருக்கு மருத்துவ சான்றிதழ் அனுப்பி மருத்துவ விடுப்பு கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார்.