முனைவர் பட்டம் பெற்ற பள்ளிக்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் என் நண்பனின் இடத்தில் இருந்து பெருமையுடன் மகிழ்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக உயர்கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஸ் முனைவர் பட்டம் பெற்று அசத்தி உள்ளார். இது தொடர்பாக அமைச்சர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், "உயர்கல்வி, ஆராய்ச்சிக் கல்வி என்று தொடர்ந்து படியுங்கள். கற்றலுக்கு முடிவே கிடையாது" என எங்கள் திராவிடத் தலைமையாசிரியர் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறிய அறிவுரை எனக்கும் பொருந்தும்!
24
முனைவர் பட்டம் பெற்ற அன்பில் மகேஸ்
அதன்படி, திருச்சிராப்பள்ளி தேசியக் கல்லூரியின் உடற்கல்வியியல் துறையில் 2021-ஆம் ஆண்டு முதல் "Physical Activity for Skill Development Through Machine Learning" என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வந்தேன். அதன் வாய்மொழித் தேர்வு இன்று நடைபெற்றது. அதில் எனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டு “முனைவர்” பட்டம் பெற்றுள்ளேன் என்பதைப் பெரு மகிழ்வோடு தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
34
முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ்க்கு பாராட்டு தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், “! “முனைவர்” பட்டம் பெற்றுள்ள தம்பி அன்பில் மகேஸ்க்கு வாழ்த்துகள்!
கல்வியே நமது உயர்வுக்கான வழி; அதிலும் ஆராய்ச்சிப் படிப்பு வரை நமது தமிழ்நாட்டு மாணவர்கள் முன்னேற வேண்டும் என்ற எனது சொல்லை, எனது அமைச்சரவையிலும் - குடும்பத்திலும் இருந்து கடைப்பிடித்திருக்கிறார் அன்பில் மகேஸ்.
மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் - மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றிக் கொண்டே முனைவர் பட்டம் பெற்றுள்ள அவர், பணிச்சுமை - நேரமின்மை - வயது ஆகியவற்றைக் கடந்து கல்விபெறத் துடிக்கும் அனைவருக்கும் 'Role Model' ஆகிவிட்டார்” என்று குறிப்பிட்டு பெருமிதம் தெரிவித்துள்ளார்.