இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக பிந்து 2வது கணவரையும் பிரிந்து மகன், மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனிடையே பிந்துவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த விஜி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துள்ளனர். விஜிக்கு மனைவியும் கல்லூரியில் படிக்கும் மகன், மகள் உள்ளனர். இவர்களின் கள்ளத்தொடர்பு விவகாரம் விஜியின் மனைவிக்கு தெரியவந்ததை அடுத்து கண்டித்துள்ளார். இதையடுத்து விஜி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பிந்து, அவருக்கு பிறந்த 5ம் வகுப்பு படிக்கும் மகன், எல்கேஜி படிக்கும் மகள் ஆகியோருடன் கடையாலுமூடு அருகே பிலாங்தோட்டவிளை ஆர்சி சர்ச் சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கவைத்துள்ளார். இதன்பிறகு விஜி பகலில் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வாடகை வீட்டில் பிந்துவுடன் தங்கி வந்துள்ளார்.