ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் அர்ச்சகர்கள் மது போதையில் ஆபாச நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, 3 அர்ச்சகர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 28 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜூலை 2-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கும்பாபிஷேகப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இக்கோவிலில் கோமதிவிநாயகம் (30) மற்றும் வினோத், கணேசன் என்பவர் உதவி அர்ச்சகராகப் பணிபுரிந்து வருகின்றனர்.
24
பக்தர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் பெரிய மாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து அர்ச்சகர்கள் மது அருந்துவதாகவும், கோயிலுக்கு வரும் சில பெண்களிடம் திருநீரை மொத்தமாக அவர்களது மூகத்தில் அள்ளிப் போடுவது எனவும் அத்துமீறி நடந்து கொள்வது என தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பக்தர்கள் மத்தியில் முகம் சுளிக்கும் வகையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
34
மது போதையில் ஆபாச நடனம்
அந்த வீடியோவில் பருத்திவீரன் பாடத்தில் வரும் பாடலுக்கு மது போதையில் ஆபாசமாக நடனமாடும் வீடியோவும், பெண் முகத்தில் விபூதி அடித்து அர்ச்சகர்கள் சிரித்து கொண்டு விளையாடுகின்றனர். இதனை சமூக வலைதளத்தில் வெளியிட்டதும் மட்டுமல்லாமல் அறநிலையத் துறை அதிகாரிகள், கோயில் நிர்வாகக் குழுவினருக்கு முன்னாள் அர்ச்சகர் ஹரிஹரன் மகன் சபரிநாதன் இந்த வீடியோவை அனுப்பி வைத்தார். இதையடுத்து, தங்களை பற்றி அவதூறாக வீடியோ வெளியிட்டதாக சபரிநாதன் மீது காவல் நிலையத்தில் கோமதிவிநாயகம் புகார் அளித்தார்.
அதேநேரம், ஆபாச நடனமாடிய அர்ச்சகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி சார்பில் தக்காரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக பெரிய மாரியம்மன் கோயில் தக்காரும், ஆண்டாள் கோயில் செயல் அலுவலருமான சக்கரையம்மாள், செயல் அலுவலர் ஜோதிலட்சுமி ஆகியோர் அர்ச்சகர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதனையடுத்து பெரிய மாரியம்மன் கோவில் அர்ச்சகர்கள் 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து தேடி வருகின்றனர். மேலும் வீடியோ வெளியிட்ட சபரிநாதன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.