கூமாபட்டி கிராமத்தின் அழகை வர்ணிக்கும் வீடியோ வைரலானதை அடுத்து, சுற்றுலாப் பயணிகள் அங்கு படையெடுக்கத் தொடங்கினர். கூமாபட்டி ஒரு சிறிய கிராமம் என்றும், அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ அனுமதி இல்லை என பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.
நவீன காலத்தில் கையில் ஒரு மொபைல் கிடைத்தால் போதும் ஓட்டல் ஓட்டலாக சென்று உணவை சாப்பிட்டு ருசி சூப்பராக உள்ளது, ஷூ வாங்க வேண்டுமா.? டிரெஸ் வாங்க வேண்டுமா.? இந்த கடைக்கு போங்க என ரீல்ஸ் தான் அதிகமாக வருகிறது. இதனை நம்பி ஓட்டலுக்கு சென்றும் டிரெஸ் கடைக்கு சென்றும் ஏமாறும் மக்களும் உண்டு.
அந்த வகையில் இன்ஸ்டாவில் வரும் ரீல்ஸில் கலர் கலராக எடிட் செய்து ஒவ்வொரு ஊரின் அழகை வெளிப்படுத்தி வீடியோக்களை நம்பி சுற்றுலா செல்லும் மக்கள் நொந்து நூடூல்ஸ் ஆகும் நிலையும் ஏற்படுகிறது. ரீல்ஸ் நம்பி சுற்றுலா செல்லும் மக்கள் அங்கே நேரில் சென்ற பிறகு தான் ஒன்றும் இல்லையென தெரிந்து அதிர்ச்சி அடையும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
24
”கூமாபட்டி” க்கு அழைக்கும் இளைஞர்
இதேபோன்ற சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கிராமத்தை அழகை வர்ணித்து வீடியோவாக வெளியிட்ட சம்பவம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
அதில், உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 மன அழுத்தமா? குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? சும்மா கூமாபட்டிக்கு வாங்க.. அனைத்தையும் மறந்துடுவிங்க, உங்களுக்கு டென்ஷனா இருந்தாலும் சரி, ஸ்ட்ரெஸ்ஸா இருந்தாலும் சரி கூமாப்பட்டிக்கு வாங்க; கூமாப்பட்டி தனி தீவுங்கர எங்க ஊரு தண்ணீ சர்பத் மாதிரி இருக்குங்க என குளத்தில் குளித்தபடி போட்ட வீடியோ செம வைரல் ஆனது.
34
கூமாபட்டிக்கு சுற்றுலாவிற்கு செல்லும் பயணிகள்
இதனையடுத்து இயற்கை ஆர்வலர்கள் மட்டுமல்ல சுற்றுலா பயணிகளும் கூமாபட்டி எந்த இடத்தில் உள்ளது என ஆர்வமாக தேட தொடங்கினார்கள். கூமாபட்டி தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில், மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கிராமமாகும்.
ஒரு பக்கம் மேற்குத்தொடர்ச்சி மலை, மறுபக்கம் விவசாய நிலம் என இயற்கையின் சொர்க்க பூமியாக இருக்கும் இந்த கூமாப்பட்டி தமிழகத்திற்கு மட்டுமல்ல சமூகவலைதளத்தில் உள்ள அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. இந்த பெருமை அந்த ஊரைச் சேர்ந்த இன்ஸ்டா இன்ஃபுளுயன்சரை தான் சேரும். ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
கூமாபட்டிக்கு அருகில் அமைந்த இந்த அணைப் பகுதி இயற்கை அழகு நிறைந்த இடமாகும். மிதமான நீரோட்டம் இருக்கும்போது, இங்கு உள்ளூர் மக்கள் உற்சாகமாக குளிக்கின்றனர். பசுமையான மலைகளும், அணையைச் சுற்றியுள்ள இயற்கை காட்சிகளும் பயணிகளை வெகுவாக கவர்கின்றன. இது மட்டுமில்லாமல் அணை அருகே ஒரு சிறிய பூங்காவும் மலைப்பகுதி இயற்கை ஆர்வலர்களுக்கு மலையேற்றத்திற்கு (trekking) ஏற்ற இடமாக உள்ளது. இதனையடுத்து ஏராளமான மக்கள் ”கூமாபட்டி” க்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
பைக்கிலும், காரிலும் செல்ல தொடங்கியுள்ளதால் அப்பகுதியின் சுற்று சூழல் மாசு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனிடையே ”கூமாபட்டி” பகுதியில் ஒன்றும் இல்லையெனவும் அணையில் குளிக்கவோ, மீன் பிடிக்கவோ யாருக்கும் அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ள பொதுப்பணித்துறை ”கூமாபட்டி” ஒரு சிறிய கிராமம் என கூறியுள்ளனர்.