10 நாட்கள் முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! குளு குளு நியூஸ் சொன்ன வானிலை மையம்!

Published : May 06, 2025, 02:55 PM IST

தமிழகத்தில் கத்திரி வெயில் சுட்டெரிக்கும் நிலையில், தென்மேற்கு பருவமழை மே 13ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

PREV
15
10 நாட்கள் முன்னதாகவே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! குளு குளு நியூஸ் சொன்ன வானிலை மையம்!
கத்திரி வெயில்

தமிழகத்தில் பிப்ரவரி மாதம் முதலே வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனிடையே மே 4ம் தேதி முதல் கத்திரி வெயில் 28ம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் கத்திரி வெயில் தொடங்கிய முதல் நாளே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. 

25
முன்கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக அந்தமான் பகுதிகளில் மே மாதம் இறுதியில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு பத்து நாட்கள் முன்னதாகவே அதாவது மே 13ம் தேதி தொடங்குவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தென்மேற்கு பருவமழை கேரளா, கர்நாடகா, கோவாவில் அதிகளவில் மழை பொழிவை கொடுக்கும். 

35
தென் தமிழகத்தில் மழை

அதேநேரத்தில் தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் தொடங்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் போது தமிழகத்திற்கு முழுவதுமாக மழை கிடைக்காவிட்டாலும் தென் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் நல்ல மழை கிடைக்கும். இதனால் அக்னி வெயிலின் தாக்கமும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

45
தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை

இந்நிலையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது மதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

55
சென்னை வானிலை நிலவரம்

அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி. மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சிஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories