Tamilnadu Rain: தமிழகத்தில் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடும் உறைபனி நிலவி வரும் நிலையில், தென் தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடும் பனிபொழிவு நிலவுகிறது. மேலும் நீலகிரி மாவட்டத்தில் தலைகுந்தா, காந்தல், உதகை உள்ளிட்ட பகுதிகளில் உறைபனி பொழிவால் அப்பகுதிகள் குட்டி காஷ்மீர் போல் மாறி குளிர் வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இப்பகுதிகளில் ஜூரோ டிகிரி செல்சியஸாக குறைந்தபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
25
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
அதாவது வடக்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.
35
வறண்ட வானிலை
அதேபோல் பிப்ரவரி 06 முதல் 09ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 21° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.
55
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.