முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்டத்திற்கு பதிலாக கோவை மாவட்டத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலை மனதில் வைத்து அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளை வேகப்படுத்தி வருகின்றன. இந்த வரிசையில் திமுக மாவட்டங்கள் தோறும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் அமர்ச்சர்களை டைம்லைனில் வைத்திருக்கிறது. அந்த வகையில் கரூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி கோவை மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
25
பம்பரமாக சுழலும் செந்தில் பாலாஜி
தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் திமுக பலமாகக் கருதப்பட்டாலும் கொங்கு மண்டலம் திமுகவுக்கு அவ்வளவு கைகொடுத்ததில்லை. ஆகவே கோவை உட்பட கொங்கு மண்டலத்தில் கட்சியை பலப்படுத்தும் முயற்சியாகவே செந்தில் பாலாஜியை கோவை மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்தது. கட்சி தலைமையின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக செந்தில் பாலாஜியும் மாவட்டம் தோறும் பம்பரம் போல சுழன்று தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
35
கரூரில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கு
ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றம் உத்தரவைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியின் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டாலும் கட்சியின் மூத்த அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அனைத்து மரியாதையும் செந்தில் பாலாஜிக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோதிமணிக்கு அவரது சொந்த கட்சி நிர்வாகிகளே கடும் எதிர்ப்பைப் பதிவு செய்த நிலையில் செந்தில் பாலாஜியின் செல்வாக்கிலேயே ஜோதிமணி வெற்றி பெற்றதாக சொல்லப்படுவதுண்டு.
அந்த வகையில் கரூர் மாவட்டத்தின் சிங்கமாக வலம் வந்த செந்தில் பாலாஜி தற்போது தொகுதி மாற திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கட்சி தலைமையின் கட்டுப்பாட்டை ஏற்று கோவையில் தீவிரமாக பணியாற்றிய செந்தில் பாலாஜி தனது தொகுதியில் அந்த அளவுக்கு ஜொலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. மேலும் 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரை சுமார் 12000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்த தேர்தலிலும் அதே தொகுதியில் இருவரும் போட்டியிடும் பட்சத்தில் மக்களின் அதிருப்தி, விஜயபாஸ்கரின் செல்வாக்கால் தாம் தோல்வி அடைய வாய்ப்பு இருப்பதாக அறிந்த செந்தில் பாலாஜி கோவையின் தெற்கு தொகுதியை குறி வைத்துள்ளாராம்.
55
கோவையில் திமுக கொடி..?
2021 சட்டமன்ற தேர்தலில் இந்த தொகுதியில் நடிகர் கமல்ஹாசன், பாஜகவின் வானதி சீனிவாசன் இடையே கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வானதி சீனிவாசன் தோல்வியைத் தழுவினார். தற்போது கமல்ஹாசன் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ளதாலும், தொகுதியில் தாம் மேற்கொண்டுள்ள பணிகள் காரணமாகவும் தொகுதியில் வெற்றிபெற்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் செந்தில் பாலாஜி இந்த தொகுதியை தேர்வு செய்துள்ளாராம். மேலும் இவர் இந்த தொகுதியில் வெற்றி பெறும் பட்சத்தில் கோவை மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் கட்சி தலைமையும் அவருக்கு கிரீன் சிக்னல் காட்டியுள்ளதாம்.