கரூர் மாவட்டத்தில் விஜக்கு கூடியது ஒன்றும் கட்டுக்கடங்காத கூட்டம் கிடையாது, அது கட்டுப்பாடற்ற கூட்டம் அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி நடைபெற்ற தவெக பிரசார கூட்டத்தில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இந்த சம்பவத்திற்கு மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் என்ற தொணியில் தவெக தலைவர் விஜய் அண்மையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
விஜய்யின் வீடியோவைத் தொடர்ந்து திமுக மற்றும் செந்தில் பாலாஜிக்கு எதிரான கருத்துகள் இணையத்தில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இது தொடர்பாக முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்டச் செயலாளருமான செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்து தனது விளக்கத்தை அளித்தார்.
24
விபத்து நடைபெற்றதும் மருத்துவமனைக்கு வந்தது எப்படி..?
அப்போது அவர் பேசுகையில், “கரூரில் தவெக கூட்ட நெரிசல் ஏற்பட்ட சில மணி நேரத்தில் செந்தில் பாலாஜி எப்படி மருத்துவமனைக்கு வந்தார் என கேள்வி எழுப்புகின்றனர். அச்சம்பவம் நடைபெற்ற நிலையில் நான் கட்சி அலுவலகத்தில் தான் இருந்தேன். அலுவலகத்தில் இருந்து மருத்துவமனை மிக அருகில் தான் உள்ளது. மேலும் நான் செல்வதற்கு முன்பாகவே அங்கு வேறுசில அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தார்கள்.
கரூரில் இருந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்படி உதவி செய்யாமல் இருக்க முடியும்? நானும் உதவி செய்யாமல் சென்னைக்கு ஓடியிருந்தால் என் மீதும் விமர்சனங்கள் எழுந்திருக்காதோ? குறை சொல்பவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்திருக்கலாமே. நாங்கள் தண்ணீ ஏற்பாடு செய்ததை குறை கூறுபவர்கள், அவர்களே தண்ணீரை ஏற்பாடு செய்திருக்கலாம். எங்கள் கட்சி தலைவர் வரும் போது 2ம்கட்ட தலைவர்கள் கூட்டதை்தை வழிநடத்தி செல்வார்கள். விஜயின் வாகனத்திறகு முன்பு 2ம் கட்ட தலைவர்கள் வழிநடத்திச் சென்றார்களா? தவெகவில் அப்படி யாராவது கூட்டத்தை வழிநடத்திப் பார்த்தீர்களா?
34
விஜய் திடீரென வாகனத்திற்குள் சென்றது ஏன்..?
பரப்புரையின் போது குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கூட தவெக தரப்பில் செய்து தரப்படவில்லை. 12 மணிக்கு பரப்புரை என சொன்னவர்கள் 4 மணிக்கு வந்திருந்தால் கூட இந்த அசம்பாவிதம் நடைபெற்றிருக்காது. குறிப்பாக பிரசாரம் நடைபெறுவதற்கு சுமார் அரை கிமீ முன்பாக விஜய் வாகனத்திற்குள் சென்றது ஏன்? அவர் முன் இருக்கையில் அமர்ந்து தொண்டர்களுக்கு கை அசைத்திருந்தால் கூட அவர்கள் அப்படியே கலைந்து சென்றிருப்பார்கள்.
கட்டுக்கடங்காத கூட்டம் இல்லை, கட்டுப்பாடற்ற கூட்டம்
மாறாக அவரை பார்க்கவேண்டும் என்ற ஆசையில் வாகனத்துடன் வந்தவர்களும் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். முன்னதாக இதே பகுதியில் தான் அதிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரம், விஜய் கூட்டத்தில் கூடியவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரம். இது ஒன்றும் பெரிய எண்ணிக்கை கிடையாது. அதே போன்று தவெக கூட்டத்திற்கு வந்தது கட்டுக்கடங்காத கூட்டம் இல்லை. கட்டுப்பாடற்ற கூட்டம். அதனால் தான் இந்த அசம்பாவிதம் நடைபெற்றுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.