எல்லா டிவி லையும் லைவ் -ON ல தானே இருந்தது..! அடிச்சா விட்ருவாங்களா.. கிடுக்குப்பிடி போடும் செந்தில் பாலாஜி

Published : Oct 01, 2025, 01:26 PM IST

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், இது சதி என தவெகவினர் குற்றம் சாட்டினர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி, செருப்பு வீச்சு மற்றும் மின் தடை குறித்து வீடியோ ஆதாரங்களுடன் விளக்கமளித்துள்ளார். 

PREV
15

தமிழக வெற்றிக் கழகம் தலைவர், நடிகர் விஜயின் கரூர் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த சம்பவம் சதியா.? விபத்தா.? பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. அதிலும் கரூர் மாவட்டத்தின் திமுகவின் முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி மீது தவெகவினர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு இன்று வீடியோ ஆதாரத்துடன் செந்தில் பாலாஜி பதில் அளித்தார்.

25

அந்த வகையில் விஜய் பேசிக்கொண்டிருக்கும் போது செருப்பு வீசப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் கீழே உள்ளார்கள். பாதிக்கப்பட்ட தம்பி ஒருவர் தலையில் கைய வைத்து தனக்கான உதவியை கேட்கிறார். கீழே இருந்து தண்ணீர் பாட்டில் தொடர்பான உதவியை கோருகிறார். அப்போது தன் மீது விஜய்யின் கவனத்தை திருப்ப வேண்டும் என்பதற்காக இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

35

அதுவும் விஜய் தன்னை பற்றி பேசுவதற்கு முன்பாகவே செருப்பு வீச்சு சம்பவம் நடைபெற்றதாக கூறிய செந்தில் பாலாஜி, விஜய் தன்னை பற்றி பேசிய நேரம் செருப்பு வீசப்பட்ட நேரத்தையும் ஆதாரத்துடன் வெளியிட்டார். அந்த வகையில் விஜய் பேச தொடங்கிய 2வது நிமிடம் மற்றும் 6வது நிமிடத்தில் செருப்பு வீசப்பட்டதாகவும் வீடியோ ஆதரத்துடன் தெரிவித்தார். 

45

மேலும் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தான் உள்ளே புகுந்து பிரச்சனையை ஏற்படுத்தியதாக பரவும் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த செந்தில் பாலாஜி, ஆங்கில தொலைக்காட்சி முதல் தமிழ் தொலைக்காட்சிகள் வரை எல்லாம் லைவில் நேரடி ஒளிபரப்பில் இருந்தது. அப்படி ஒரு சம்பவம் நடைபெற்று இருந்தால் உங்கள் கண்ணில் படாமல் இருந்திருக்குமா.? 

20ஆயிரம் பேர் கூடி உள்ள கூட்டத்தில் ஒரு சிலர் உள்ளே சென்று ஆசாதாரண சூழ்நிலை உருவாக்க முடியுமா.? விஷமத்தனமான பிரச்சனையில் ஈடுபட முடியுமா என கேள்வி எழுப்பினார். பத்திரிக்கையாளர் கூட்டத்தில் 30 பேர் இருக்கிறார்கள். அந்த இடத்தில் 2 அல்லது 3 பேர் விஷமத்தனமாக செயல்பட்டால் ஏற்றுக்கொள்வீர்களா என கேள்வி எழுப்பினார்.

55

நெரிசல் ஏற்பட்ட போது ஜெனரேட்டர் அறைக்கும் மக்கள் நுழைகிறார்கள். இதனால் அங்கு இருந்த ஜெனரேட்டர் ஆப்ரேட்டர் அதனை ஆப் செய்துள்ளார். அப்போது கூட தெருவிளக்கு அணையவில்லை. ஒரு தலைவர் சீட்டின் முதல் பக்கம் உட்கார வேண்டும் அல்லது மேலே ஏறி கை அசைக்க வேண்டும். 

ஆனால் வாகனத்தின் உள் பகுதிக்கு சென்று விட்டார். விளக்கு அணைத்து வைக்கப்பட்டது. இதனால் விஜய்யை பார்க்க முடியாதவர்கள் அந்த வாகனத்தை தொடர்ந்தே முன்னேறியுள்ளதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories