ஆயிரக்கணக்கான செருப்புகள் கிடந்தது.. ஆனால் ஒரு தண்ணீர் பாட்டில் கூட கீழே கிடக்கவில்லை- செந்தில் பாலாஜி

Published : Oct 01, 2025, 01:00 PM IST

கரூர் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சதியா அல்லது விபத்தா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், திமுக நிர்வாகி செந்தில் பாலாஜி, இடத்தேர்வு மற்றும் ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பி வீடியோ ஆதாரத்துடன் பதிலளித்துள்ளார். 

PREV
13

தமிழக வெற்றிக் கழகம் தலைவர், நடிகர் விஜயின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இதில் 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட பலர் அடங்குவர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த சம்பவம் சதியா.? விபத்தா.? பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது. 

அதிலும் கரூர் மாவட்டத்தின் திமுகவின் முக்கிய நிர்வாகியான செந்தில் பாலாஜி மீது தவெகவினர் விமர்சித்து வருகிறார்கள். இதற்கு இன்று வீடியோ ஆதாரத்துடன் செந்தில் பாலாஜி பதில் அளித்தார். 

23

விஜய் வருவதையறிந்து வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு பலர் சென்றார்கள். ஒன்றரை வயது முதல் ஐந்து வயது குழந்தை வரை உயிரிழந்துள்ளனர். இதனை அரசியலாக பார்க்க வேண்டாம். வருங்காலத்தில் இது போன்ற நிலை ஏற்படக்கூடாது என கேட்டுக்கொள்வதாக கூறினார். தொடர்ந்து அவரிடம் குறைவான மக்கள் கூடும் இடத்தை தவெகவிற்கு ஒதுக்கப்பட்டது .? ஏன் என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், லைட்ஸ் கார்னர் பகுதியில் எத்தனை பேர் நிக்கலாம் என நீங்களே கூறுங்கள்.

இதேபோல உழவர் சந்தை தேதியிலும் எத்தனை பேர் பிடிக்க முடியும் என பத்திரிகையாளர்கள் தான் கூற வேண்டும். அதையும் பார்த்த பிறகு வேலுச்சாமி இடத்தில் எத்தனை பேர் இருக்க முடியும் என்பதை நீங்கள் தான் கூற வேண்டும்.

33

தொடர்ந்து பேசியவர் சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆயிரக்கணக்கான செருப்புகள் சிதறி கிடந்தது. ஆனால் இவ்வளவு கூட்டம் வந்துள்ளது. ஒரு வாட்டர் பாட்டிலாவது கிடந்ததா.? என கேள்வி எழுப்பினார். கூட்டங்கள் எவ்வளவு வருகிறதோ அதற்கு ஏற்றது போல் இடங்களை தேர்வு செய்யப்பட வேண்டியது அரசியல் கட்சிகளின் கடமை.

இரண்டு லட்சம் பேர் முப்பெரும் விழாவிற்கு வருவதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இரண்டரை லட்சம் பேர் வந்தார்கள். அதற்கு ஏற்றார் போல் அதற்கான தனியார் இடத்தை வாங்கி ஏற்பாடு செய்யப்பட்டது. முப்பெரும் விழாவில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டது தண்ணீர் பாட்டில் இருந்து பிஸ்கட் கூட அனைத்தும் கொடுக்கப்பட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories