அதிமுகவில் அதிகார மோதல் காரணமாக செங்கோட்டையன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு ஆதரவாக இருந்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து பல்டி அடித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் இருந்த ஜெயலலிதாவின் மரணத்தை தொடர்ந்து அதிகார மற்றும் உட்கட்சி மோதல் உச்சத்தை தொட்டுள்ளது அதிமுகவில், இதன் காரணமாக அதிமுக பல பரிவுகளாக பிரிந்து கிடக்கிறது. இதனையடுத்து நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் அதிமுகவிற்கு தோல்வி மேல் தோல்வி கிடைத்து வருகிறது.
எனவே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இணைக்க வேண்டும் எனவும், இதன் காரணமாக தென் மாவட்டங்களில் அதிமுக வலுப்பெறும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக பொதுச்செயலாளராக உள்ள எடப்பாடி பழனிசாமி இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
24
பிரிந்து கிடக்கும் அதிமுக நிர்வாகிகள்
இந்த நிலையில் இன்னும் 8 மாதங்களில் தமிழகம் சட்டமன்ற தேர்தலை சந்திக்கவுள்ளது. எனவே இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற பிரிந்து சென்ற தலைவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். மேலும் இதற்கான பணியை அதிமுக தலைமை இன்னும் 10 நாட்களில் தொடங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
ஆனால் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளாத எடப்பாடி பழனிசாமி அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பதவிகளில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டது. இது மட்டுமில்லாமல் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தவர்களையும் அடுத்து அடுத்து நீக்கியது.
34
எடப்பாடிக்கு கெடு விதித்த செங்கோட்டையன்
இந்த சூழலில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் திடீரென எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பல்டி அடித்துள்ளனர். அந்த வகையில் ஈரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் ஒன்றன் பின் ஒன்றாக எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவு உங்களுக்கு தான் என தெரிவித்து வருகிறார்கள்.
சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு நேரில் வந்த பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி, முன்னாள் அமைச்சர் கேசி கருப்பண்ணன், சண்முகநாதன் ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
இதே போல ஈரோடு மாவட்டம் அந்தியூர், பவானி, தாளவாடி, கோபிசெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த அதிமுகவினரும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார்கள். எனவே செங்கோட்டையனுக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து நீக்கப்பட்டு வரும் நிலையில்,
கட்சியில் இருந்து நீக்கப்பட்டு விடுவோமோ என்ற அச்சத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்களது ஆதரவு தெரிவித்து வருவது செங்கோட்டையனுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.