இபிஎஸ் குறித்து உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்! பரபரக்கும் அதிமுக!

Published : Nov 07, 2025, 01:06 PM IST

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர், எடப்பாடி பழனிசாமி கொல்லைப்புறமாக முதல்வரானவர். தனக்கு உதவிய சசிகலா மற்றும் பாஜகவிற்கு துரோகம் செய்தவர் என்றும் குற்றம் சாட்டினார். மேலும், கொடநாடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர்.

PREV
14

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில் இன்று அவரது ஆதரவாளர்கள் 14 பேர் அதிமுகவில் நீக்கப்பட்ட நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கடந்த 2009ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கப்பட்டவர் இபிஎஸ். பிரிந்து சென்றவர் இணைந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என அதிமுக நன்மைக்காக பேசினேன்.

24

கொடாநாடு கொலை கொள்ளை வழக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என குரல் கொடுக்கப்பட்டதா? கொடாநாடு கொலை கொள்ளை வழக்கில் ஒரு நாள் கூட சிபிஐ விசாரணைக்கு குரல் கொடுக்காதவர் எடப்பாடி பழனிசாமி. கொடாநாடு கொலை கொள்ளை வழக்கை வைத்து திமுகவின் B-Team இருப்பவர் யார் என தெரிந்து கொள்ளலாம்.

34

ஜெயலலிதாவால் மூன்று முறை முதல்வராக அமர்த்தப்பட்டு ஓபிஎஸ் ஆனால் இபிஎஸ் கொல்லைப்புறமாக முதல்வராக ஆனவர். ஓபிஎஸ் எங்களைப் போன்றோர் முன்மொழிந்ததால் முதலமைச்சரானார். எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனதற்கு வழிவகை செய்த சசிகலாவை கொச்சையாக பேசினார். எனது தொகுதியை விடவும் உங்கள் தொகுதியில் சாலை சிறப்பாக உள்ளது என இபிஎஸ் கூறினார்.

44

எல்லா பணத்தையும் தொகுதியில் கொட்டி விட்டீர்கள் என என்னிடம் கூறியவர். நாடாளுமன்றத் தேர்தலில் பணம் செலவு செய்தால் போதும் என சீட் வழங்கியவர் இபிஎஸ் என குற்றம்சாட்டினார். எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்த தடுமாறிய போது ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து வந்தவர். அதேபபோல் நான்கரை ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவிய பாஜக பாஜகவிற்கு துரோகம் செய்தவர் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories