Published : Feb 14, 2025, 02:39 PM ISTUpdated : Feb 14, 2025, 02:40 PM IST
அதிமுகவில் உட்கட்சி மோதல் அதிகரித்து வரும் நிலையில், மூத்த நிர்வாகி செங்கோட்டையன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதிமுக தோல்விக்கு துரோகிகள்தான் காரணம் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவிற்கு துரோகம் செய்யும் நிர்வாகிகள் யார்.? செங்கோட்டையன் வெளியிட்ட புதிய தகவல்
அதிமுகவில் தினந்தோறும் உட்கட்சி மோதல் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது அதிமுக மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அத்திக்கடவு அவநாசி திட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் நடத்திய பாராட்டு விழாவில் எம்ஜிஆர் ஜெயலலிதா புகைப்படங்கள் இல்லாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்தியதற்கு அதிமுக மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவித்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். தன்னை வளர்த்து விட்டு ஆளாக்கிய தலைவர்களின் படம் இல்லாத காரணத்தால் விழாவுக்குச் செல்லவில்லை என்று விளக்கம் அளித்தார்.
24
யார் அந்த துரோகிகள்.?
இந்நிலையில், ஈரோடு அத்தானியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட செங்கோட்டையன், எந்த தியாகத்தையும் செய்யக்கூடிய தொண்டர்கள் வேறு எந்த இயக்கத்திலும் இல்லை. அதிமுகவில் மட்டும்தான் இருக்கிறார்கள். இந்த முறை மட்டும்தான் தோல்வியைத் தழுவியுள்ளோம். அதிமுக தேர்தலில் தோல்வியைச் சந்தித்ததற்கு துரோகிகள்தான் காரணம். அவர்கள் யார் என அடையாளம் காட்ட வேண்டும் என பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், யார் அந்த துரோகி.? யாரை குறிப்பிடுகிறார் என பல கேள்விகள் எழுந்தது.
34
செங்கோட்டையன் விளக்கம்
இதனையடுத்த திடீரென முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், எதிரிகள், துரோகிகள் எடுத்துவைக்கும் வாதங்கள் அனைத்தும் அதிமுகவை அசைத்துக்கூட பார்க்கமுடியாது. அது அதிமுகவுக்கு எந்த சேதாரத்தையும் ஏற்படுத்தாது என கூறினார். இதனிடையே இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில், துரோகம் என ஒட்டுமொத்தமாக சொல்லவில்லையெனவும், அந்தியூர் தொகுதியை மட்டுமே கூறியதாக தெரிவித்தார். அந்தியூரில் இதுவரை சேவல், புறா சின்னத்தில் தொடர்ந்து வெற்றி பெற்ற நிலையில் இந்த முறை தோல்வி அடைந்ததற்கு சில பேர் இந்த இயக்கத்திற்கு துரோகத்தை செய்திருக்கிறார்கள்.
44
இபிஎஸ் பெயரை குறிப்பிடாதது ஏன்.?
அதை தான் நாம் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தான் சொனேன் என செங்கோட்டையன் தெரிவித்தார். எனவே அந்த வார்த்தை அந்தியூர் தொகுதிக்கு மட்டும்தான் பொருந்தும் என கூறினார். எடப்பாடி பழனிசாமி பெயரை குறிப்பிடாமல் பொதுக்கூட்டங்களில் பேசியது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
இரண்டு நாள் பொதுக்கூட்டத்திலும் கழக எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் என்று நான் கூறியிருக்கிறேன் என கூறினார். துரோகிகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் காலையில் கூறிய கருத்திற்கு மாலை அவரே தெளிவாக பதிலை கூறிவிட்டார் என செங்கோட்டையன் தெரிவித்தார்.