சாட்டை துரைமுருகனுக்கு எதிராக சீமான் அறிக்கை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் நடத்தும் யூடியூப் சேனலுக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் அறிவித்துள்ளார்.
நாதக கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன்
நாம் தமிழர் கட்சி கொள்கை பரப்பு செயலாளராக இருந்து வருபவர் சாட்டை துரைமுருகன். இவர் சீமானின் வலது கரமாக அறியப்படுபவர். நாதகவில் இருந்து பல்வேறு முக்கிய நிர்வாகிகள் விலகி சென்றாலும் சீமானுடன் பயணித்து வருகிறார். இவர் சாட்டை என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில் அரசியல் தலைவர்களை விமர்சித்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார்.
சாட்டை யூடியூப் சேனல்
குறிப்பாக திமுகவில் முதல்வர் ஸ்டாலின், உதயநிதி உள்ளிட்டோரை கடுமையாக சாடி வந்தார். பல வழக்குகளில் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்ட ஜாமீனில் வெளியே வந்தார். அண்மையில் நித்யானந்தாவின் கைலாசா குறித்து கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நித்யானந்தாவும் பதிலளித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன் தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சாட்டை துரைமுருகன் தனது யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்! என்ன காரணம்? வெளியான தகவல்!
நயினார் நாகேந்திரன் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல
அதில் நயினார் நாகேந்திரன் இஸ்லாமியருக்கு எதிரானவர் அல்ல என்பது போன்ற கருத்துகளை கூறியது மட்டுமல்லாமல் அவரை பாராட்டி பேசியிருந்தார். ஏற்கெனவே நாம் தமிழர் கட்சி பாஜகவின் பி டீம் என விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் துரைமுருகன் நடத்தும் சாட்டை சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் தொடர்பு இல்லை என சீமான் தெரிவித்துள்ளார்.
சீமான் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்: துரைமுருகன் நடத்தும் சாட்டை யூடியூப் சேனலுக்கும் நாம் தமிழர் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதில் வரும் கருத்துகள், செய்திகள் அனைத்தும் அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். அவற்றுக்கு நாம் தமிழர் கட்சி எந்த வகையிலும் பொறுப்பாகாது என தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை வெளியானதை அடுத்து சாட்டை துரைமுருகன் சீமான் இடையே மோதலா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.