3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு- போக்குவரத்து துறை அதிரடி

Published : Apr 16, 2025, 07:05 AM ISTUpdated : Apr 16, 2025, 02:57 PM IST

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கவுள்ளது. சென்னை, கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலிருந்து தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

PREV
15
3 நாள் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷியான அறிவிப்பு- போக்குவரத்து துறை அதிரடி

 Weekend holidays and Good Friday : சொந்த ஊரில் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காத காரணத்தாலும், குடும்ப சூழ்நிலை காரணமாகவும் பல கோடி பேர் வெளியூர்களுக்கு தினந்தோறும் வேலை தேடி செல்கிறார்கள். எனவே குடும்பத்தை விட்டு வெளியூர் சென்றவர்களுக்கு வார விடுமுறையோடு கூடுதலாக விடுமுறை கிடைத்தால் கொண்டாட்டம் தான்.

அந்த வகையில் இந்த வாரம் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர் விடுமுறை நாட்கள் வரவுள்ளது. எனவே புனித வெள்ளி, மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது. 

25

சிறப்பு பேருந்து அறிவிப்பு

இது தொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று 17/04/2025 (வியாழக்கிழமை) 18/04/2025 (புனித வெள்ளி) 19/04/2025 (சனிக்கிழமை), மற்றும் 20/04/2025 (ஞாயிற்றுக் கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு

17/04/2025, 18/04/2025 மற்றும் 19/04/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

35
school holiday

கோயம்பேடு, கிளாம்பாக்கத்தில் இருந்து சிறப்பு பேருந்து

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17/04/2025 (வியாழக்கிழமை) அன்று 575 பேருந்துகளும், 18/04/2025 (வெள்ளிக் கிழமை) மற்றும் 19/04/2025 சனிக் கிழமை 450 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.

மாதாவரத்திலிருந்து 17/04/2025 முதல் 19/04/2025 வரை தலா 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

45
School holiday

வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்து

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17/04/2025 அன்று 100 பேருந்துகளும். 18/04/2025 மற்றும் 19/04/2025 தலா 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 20/04/2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று 735 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
 

55

முன்பதிவு செய்து பயணியுங்கள்

இந்நிலையில், இந்த வார இறுதியில் வியாழக்கிழமை அன்று 11,751 பயணிகளும் வெள்ளிக்கிழமை அன்று 4,974 பயணிகளும் சனிக்கிழமை அன்று 3,255 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை அன்று 13,129 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 
 

Read more Photos on
click me!

Recommended Stories