ரயில் பயணிகளுக்கு முக்கிய செய்தி! பராமரிப்பு காரணமாக நாளை ரயில்கள் ரத்து! இதோ லிஸ்ட்!

திருச்சியில் பராமரிப்பு பணி காரணமாக மெமு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தாம்பரம் - விழுப்புரம், சென்னை எழும்பூர் - புதுச்சேரி உட்பட சில ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

Maintenance work! MEMU trains cancelled tvk
Train

தமிழகம் மட்டுமன்றி  இந்தியா முழுவதும் போக்குவரத்து துறையில் முக்கிய பங்கு வகிப்பது ரயில்வே துறை. தினமும் லட்சக்கணக்கான பொதுமக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக குறைவான கட்டணம், பாதுகாப்பான பயணம் என்பதால் அதிகளவில் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். 

Maintenance work! MEMU trains cancelled tvk
Maintenance

இந்நிலையில் அவ்வப்போது தண்டவாளங்கள் பராமரிப்பு பணிகள், சிக்னல் பணிகள், மற்றும் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்ட காரணங்களுக்கான முக்கிய வழித்தடங்களில் அவ்வப்போது ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதும் பகுதியாக ரத்து செய்யப்பட்டு மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுவதும் வழக்கம். 

இதையும் படிங்க: தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்! மழைக்கு நாள் குறித்த வானிலை மையம்! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?


MEMU Trains

இந்நிலையில் திருச்சியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதால் சில ரயில்களின் சேவை மற்றும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Southern Railway

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில்: காலை 9.45 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் - விழுப்புரம்  மெமு ரயில் ரயில் மற்றும் பிற்பகல் 1.40 மணி விழுப்புரம் - சென்னை கடற்கரை மெமு ரயில் விக்கிரவாண்டி - விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதையும் படிங்க:  பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களுக்கும்! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Tambaram Train

அதேபோல் காலை 6.35 மணிக்கு புறப்படும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி மெமு ரயில் விழுப்புரம் - புதுச்சேரி இடையிலும், பிற்பகல் 3 மணிக்கு புதுச்சேரியில் இருந்து புறப்படும் புதுச்சேரி - திருப்பதி மெமு ரயில் புதுச்சேரி - முண்டியம்பாக்கம் இடையிலும் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

vuukle one pixel image
click me!