Published : Apr 16, 2025, 07:45 AM ISTUpdated : Apr 16, 2025, 02:58 PM IST
மெரினா கடற்கரையில் ரூ.6 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. 50 ஏக்கர் நிலத்தில் புதிய வசதிகள் அமைக்கப்படவுள்ளது. இந்த நிலையில் மெரினா கடற்கரை கட்டணம் தொடர்பாக மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.
Marina Beach Entrance Fee ஆசியாவிலேயே மிக நீண்ட கடற்கரை மெரினா கடற்கரை, நாள் தோறும் பல லட்சம் மக்கள் வந்து செல்கிறார்கள். அழகிய மணற்பரப்பில் நடக்க மக்கள் விருப்பப்படுவார்கள். இந்த நிலையில் மெரினா கடற்கரைக்கு வரும் பொதுமக்களிடம் எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த சூழலில் மெரினா கடற்கரையில் நீலக்கொடி கடற்கரை திட்டத்தின் அடிப்படையில் 6 கோடி ரூபாய் செலவில், மெரினா கடற்கரையில் மேம்பாட்டு பணிகள் முன்னெடுக்கப்பட உள்ளன. எனவே 250 ஏக்கர் நீளமுள்ள மெரினா கடற்கரையில் 50 ஏக்கர் நிலத்தை சென்னை மாநாகராட்சி நிர்வாகம் தேர்வு செய்துள்ளது.
24
Marina Beach Entrance Fee
மெரினா கடற்கரை - நீலக்கொடி திட்டம்
இதில் சாய்வு இருக்கைகள், சிற்றுண்டி கடைகள், அவுட்டோர் ஜிம், வாட்ச்-டவர்ஸ், தோட்டம், கழிவறை சர்ஃபிங் பகுதி மற்றும் முதலுதவி மையங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. சர்வீஸ் லேனில் பார்க்கிங் வசதிகள், கடற்கரையில் 100க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, மண்டலத்திற்குள் வியாபாரிகள் கடைகள் அமைக்க தடை செய்யப்பட உள்ளனர்.
மே மாத இறுதிக்குள் பணிகள் முடிவடையும் என்று மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மெரினா கடற்கரை ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒன்றன் பின் ஒன்றாக புதுப்பிக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
34
Blue flag project
மாத செலவு 6 லட்சம் ரூபாய்
தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சுமார் 25 தொழிலாளர்களை கடற்கரையை கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபடுத்த உள்ளது. கடற்கரையை கண்காணிக்க ஆகும் மாத செலவு, சம்பளம் மற்றும் இயந்திரங்கள் உட்பட ரூ.6 லட்சம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவளம் கடற்கரை பகுதி ஊராட்சி பகுதியில் வருவதால் பராமரிப்பு பணிகளுக்காக கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
44
Marina Beach fee collection
நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுமா.?
இதே போல மெரினா கடற்கரைக்கு வருபவர்களிடமும் பணம் வசூலிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதனை சென்னை மாநகராட்சி மறுத்துள்ளது. இதன் படி சென்னை மாநகராட்சி வருவாய் அதிகம் உள்ள மாநகராட்சி என்பதால் பராமரிப்பு பணிகளுக்கான கட்டணத்தை மாநகராட்சியே ஈடு செய்யும் என்பதால் கட்டணம் வசூலிக்கப்படாது என சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளார்.