தற்குறிகளால் நிறைந்த கூட்டம்.. உச்சத்தை விட்டுட்டு உன்ன யாரு வரச்சொன்னது..? விஜய்யை விளாசிய சீமான்

Published : Sep 15, 2025, 08:16 AM IST

தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யை பார்ப்பதற்காக குவிந்தவர்கள் தற்குறி கூட்டம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானம் விமர்சித்துள்ளார்.

PREV
13
நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம்

நிலத்தை இழந்தால் பலத்தை இழப்போம் என்ற தலைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோவையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், “TVK TVK என ஒரு கூட்டம் வருகிறது, அவர்கள் மத்தியில் நாங்கள் டீ விற்க வந்தவர்கள் கிடையாது, நாட்டில் நிலவுகின்ற தீய அரசியலுக்கு தீ வைக்க வந்தவர்கள் என நீங்கள் உரக்கச் சொல்ல வேண்டும். தளபதி தளபதி என்றால் நாங்கள் நாட்டின் தலைவிதியை மாற்றி எழுத வந்தவர்கள். நாங்கள் கூடிக்கலைகிற காகங்கள் கிடையாது தத்துவக் கூட்டம் என்பதை உணர்த்த வேண்டும்.

23
மக்களின் பிரச்சினைகளைக்கூட எழுதி வைத்து படிப்பதா..?

மக்களுக்கான பிரச்சினைகளைக் கூட எழுதி வைத்து பேசுபவன் எங்கே, இதயத்தில் இருந்து பேசுபவன் எங்கே.? பார்த்து எழுதும் மாணவன், படித்து எழுதும் மாணவன்., இருவரில் யார் சிறந்தவரென பார்த்துக் கொள்ளுங்கள். எம்ஜிஆர் ஒன்றரை மணி நேரமானாலும் எழுதி வைக்காமல் படிப்பார். விஜயகாந்த் மனதில் இருந்து மக்களின் மொழியில் பேசுவார். ஸ்டாலின் கூட துண்டு சீட்டு தான். ஆனால் எடப்பாடியும், தம்பியும் தான் முழு சீட்டு, இவர்களால் மழையில் கூட பேச முடியாது. ஏனெனில் சீட்டு நனைந்துவிடும்.

33
உன்ன யாரு வரச்சொன்னது..?

நான் அவ்வளவு உச்சத்ததை விட்டுவிட்டு வந்தேன் என்கிறார். யார் வரச்சொன்னது? எதற்காக வருகிறார்? என் அன்பு சகோதரர் அஜித்தும், ரஜினிகாந்த்தும் தங்கள் புகழை வியாபாரம் செய்ய விரும்பவில்லை. அரைபைத்தியத்தை எல்லாம் தலைவணாக்கி வெச்சுருக்கீங்க... இவ்ளோ நாள் ஒரு வார்த்தையாச்சும் இதை பத்தி பேசுனீயா? திரையில் பார்த்த நடிகரை நேரில் பாாக்க கூட்டம் வரத்தான் செய்யும். நடிகர் அஜித்தை இறக்கினால் இதைவிட அதிக கூட்டம் வரும் என்று தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories