பள்ளி குழந்தைகளுக்கு மாதம் 2000 ரூபாய்.! இன்று முதல்.... தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு

Published : Sep 15, 2025, 07:36 AM IST

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் "அன்புக்கரங்கள்" திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்று முதல்வர் இத்திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

PREV
15
பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை

குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகின்றது. இந்த நிலையில் மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு அரசின் “தாயுமானவர்“ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், “அன்புக்கரங்கள்” திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.

25
மாதம் 2000 ரூபாய் உதவித்தொகை

அக்குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப் படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரிக் கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 15.09.2025 இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து, குழந்தைகளுக்கு உதவித் தொகையினை வழங்கவுள்ளார்கள்.

மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ஆம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ/ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளும் அன்றைய தினம் வழங்கவுள்ளார்கள்.

35
யார் விண்ணப்பிக்கலாம்?

ஆதரவற்ற குழந்தைகள்: பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்.

கைவிடப்பட்ட குழந்தைகள்: பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் குழந்தையைக் கைவிட்டவர்கள்.

ஆதரவு தேவைப்படுவோர்:

பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உடல்/மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் சிறையில் இருப்பவர்கள்.

பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.

45
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:

குடும்ப அட்டை நகல்

குழந்தையின் ஆதார் அட்டை நகல்

பிறப்புச் சான்றிதழ்

கல்வி மாற்றுச் சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழ்

குழந்தையின் வங்கிக் கணக்கு புத்தக நகல்

55
விண்ணப்பிக்கும் முறை:

நேரில்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் அல்லது "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் விண்ணப்பிக்கலாம்.

முகவரி (எடுத்துக்காட்டு - சென்னை): மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், எண்:1, புது தெரு, பெருநகர சென்னை மாநகராட்சி வணிக வளாகம், முதல் தளம் (RTO அலுவலகம் எதிரில்), ஆலந்தூர், சென்னை - 600016.

Read more Photos on
click me!

Recommended Stories