Published : Feb 27, 2025, 02:10 PM ISTUpdated : Feb 27, 2025, 02:40 PM IST
நடிகை விஜயலட்சுமி புகாரில் சீமான் வளசரவாக்கம் காவல்நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகாததால், நீலாங்கரை வீட்டில் போலீசார் மீண்டும் சம்மன் ஒட்டினர். நாளை ஆஜராகாவிட்டால் கைது செய்யப்படலாம்.
சீமானுக்கு போலீசார் விதித்த 10 நிபந்தனைகள்.! மீறினால் அவ்வளவு தான்- தேதி குறித்த காவல்துறை
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் 12 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு போலீசார் சம்மன் அளித்திருந்தனர். அதன் படி இன்று வளசரவாக்கம் போலீஸ் முன்பு ஆஜராகியிருக்க வேண்டும். ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனையடுத்து நாளை காலை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பு போலீசார் சம்மனை ஒட்டிள்ளனர்.
25
actress vijayalakshmi and politician seeman
சீமான் வீட்டு வாசலில் ஒட்டப்பட்டுள்ள சம்மனில், வளசரவாக்கம் காவல் நிலையத்தில் 01.06.2011ஆம் நாளன்று வழக்கு பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் படி, இக்குற்ற வழக்கில் எதிரியான தங்களிடம் நேரில் விசாரணை மேற்கொண்டு, உண்மைகளையும், சூழ்நிலைகளையும், வெளிக்கொணர போதுமான வழி வகைகள் உள்ளன என்பது தெரிய வந்ததால் தங்களை 27.02.2025ஆம் தேதி காலை 11.00 மணிக்கு வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என 24.02.2025 ம் தேதி தங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
35
ஆனால் தாங்கள் 27.02.2025 ம்தேதி காலை 11.00 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. மேலும் நீதிமன்றம் வழக்கை விரைந்து முடிக்க உத்தரவு இட்டுள்ளதால் 28.02.2025 ம்தேதி காலை 11.00 மணிக்கு ஆர் 9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்பது இதன் முலம் தங்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுவதாக அந்த சம்மனில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதனால் கீழ்கண்ட அனைத்து உத்தரவுகளுக்கும் இசைவு அளிக்குமாறு தங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
1. எதிர்வரும் காலத்தில் தாங்கள் எவ்வித குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டீர்கள்.
3. இவ்வழக்கு தொடர்பாக எந்தவொரு நபரும் தனக்கு தெரிந்த உண்மைகளை நீதிமன்றத்திற்கோ அல்லது காவல் நிலையத்திற்கோ தெரிவிக்கும் போது அவ்வாறு அந் நபர் தெரிவிக்கும் உண்மைகளை தடுக்கும் விதமாக அவரை மிரட்டும் வகையிலோ செயல்பட மாட்டீர்கள்.
4. தேவைப்படும் நேரங்களில் உரிய உத்தரவின் பேரில் தாங்கள் நீதிமன்றத்தில் ஆஜராவீர்கள்.
5. தேவைப்படும் போது விசாரணை தொடர்பாக தாங்கள் நேரில் ஆஜராகி விசாரணை நடத்துவதற்காக ஒத்துழைப்பை அளிப்பீர்கள்.
6. இவ்வழக்கு சரியான முறையில் நிறைவடைய ஏதுவாக புலன்விசாரணை தொடர்பாக எந்த ஒரு தகவலையும் முழுமையாகவோ பகுதியாகவோ மறைக்காமல் அனைத்து உண்மைகளையும் தாங்கள் வெளியீடுவீர்கள்.
7. விசாரணைக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் தொடர்புடைய பொருட்களையும் தாங்கள் அளிப்பீர்கள்.
55
seeman
8 இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட மற்ற எதிரிகளை கைது செய்வதற்காக தாங்கள் முழு அளிவிலான ஒத்துழைப்பு மற்றும் உதவி அளிப்பீர்கள்.
9. இவ்வழக்கு புலன் விசாரணை தொடர்பாகவோ அல்லது இவ்வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் போதோ எவ்விதத்திலும் தாங்கள் சாட்சியங்களை கலைக்க மாட்டீர்கள்.
10. இவை தவிர இவ்வழக்கு உண்மை விவரங்கள் தொடர்பாக புலன் விசாரணை அதிகாரி அல்லது காவல் நிலைய அதிகாரி விதிக்கும் இதர நிபந்தனைகளுக்கும் தாங்கள் கட்டுப்படுவீர்கள்.
இவ்வறிக்கை நிபந்தனைகளை கடைப்பிடிக்கவோ இசைவளிக்கவோ தவறும் பட்சத்தில் தாங்கள் கைது செய்ய கூடும் என இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என அந்த சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டு வாசலில் போலீசார் ஒட்டப்பட்டிருந்த சம்மனை சீமானின் உதவியாளர் கிழித்தெறிந்தார். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது