போலீஸ் கையில் முக்கிய ஆதாரம்! விஜயலட்சுமியால் சிக்கல்- விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சீமான்

Published : Feb 27, 2025, 01:17 PM ISTUpdated : Feb 27, 2025, 01:22 PM IST

நடிகை விஜயலட்சுமி அளித்த புகாரில் சீமான் மீதான வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜயலட்சுமியிடம் போலீசார் மீண்டும் வாக்குமூலம் பெற்றுள்ளனர், மேலும் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

PREV
15
போலீஸ் கையில் முக்கிய ஆதாரம்! விஜயலட்சுமியால் சிக்கல்-  விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சீமான்
போலீஸ் கையில் முக்கிய ஆதாரம்! விஜயலட்சுமியால் சிக்கல்- விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்த சீமான்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் சீமான், இவர் தம்பி, வாழ்த்துக்கள் உள்ளிட்ட பல தமிழ்படங்களை இயக்கியுள்ளார். இதில் வாழ்த்துக்கள் திரைப்படத்தில் இயக்கிய போது அந்த படத்தில் நடித்த நடிகை விஜயலட்சுமியோடு சீமானுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி போலீசில் கடந்த 2011-ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். மேலும் தனது வீட்டில் சீமானுடன் ஒன்றாக இருந்த புகைப்படத்தையும் வெளியிட்டிருந்தார்.

25
விஜயலட்சுமி பாலியல் புகார்

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அடுத்த சில வாரங்களில் இந்த வழக்கை நடிகை விஜயலட்சுமி திரும்ப பெற்றுக்கொண்டார். அவ்வப்போது வீடியோ வெளியிட்டு சீமானை கடுமையாக விமர்சனம் செய்தார். இந்த நிலையில் மீண்டும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சீமான் மீது வளசரவாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அப்போது சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி உறவில் இருந்ததாக தெரிவித்திருந்தார். மேலும் 6 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியிருந்தார். 

35
வழக்கை விசாரிக்க நீதிபதி அனுமதி

இந்த நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில்,  2012ம் ஆண்டிலேயே விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக் கொண்டார். ஆனால், வேண்டுமென்றே இந்த வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

இந்த வழக்கு விசாரணை நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது. அப்போது விஜயலட்சுமி இந்த வழக்கை திரும்பப் பெற்றாலும், பாலியல் வன்கொடுமை என்ற தலைப்பில் விசாரிக்க காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.

45
விஜயலட்சுமியிடம் விசாரணை

மேலும் இந்த வழக்கை சர்வ சாதாரணமாக  முடித்து விட முடியாது" என்று கூறி சீமானின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக  12 வார காலத்திற்குள் முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து போலீசார் வளசரவாக்கத்தில் தங்கியிருக்கும் விஜயலட்சுமியிடம் பல மணிநேரம் விசாரணை நடத்தி மீண்டும் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.

55
விசாரணைக்கு ஆஜராகாத சீமான்

மேலும் சீமானுடன் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களையும் விஜயலட்சுமி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த சூழ்நிலையில் பிப்ரவரி 27ஆம் தேதி நேரில் ஆஜராக சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்திருந்தனர். எனவே இன்றைய விசாரணைக்கு சீமான் ஆஜராகுவார் என எதிர்பாரக்கப்பட்டது. 

ஆனால் வளசரவாக்கம் போலீசார் முன்பு விசாரணைக்கு சீமான் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு வேறு ஒருநாளில் ஆஜராவதாக வழக்கறிஞர்கள் மூலம் கடிதம் கொடுத்தனுப்பியுள்ளார். அதில் ஏற்கனவே திட்டமிட்ட சுற்றுப்பயணம் காரணமாக இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை என விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

இதனிடையே நாளை காலை விசாரணைக்கு ஆஜராகவில்லையென்றால் கைது செய்ய நேரிடும் என சீமான் வீட்டு வாசலில் போலீசார் சம்மனை ஒட்டியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories