இதன்பிறகு சென்னையில் அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ''தமிழ்நாட்டில் தினமும் நடக்கின்ற பிரச்னைகளுக்கு சம்பிரதாயத்துக்காக அறிக்கை விடுவதில், சம்பிரதாயத்துக்காக மழை நீரில் நின்று போட்டோ எடுத்துக் கொள்வதில் எனக்கு நம்பிக்கை இல்லை. மக்களுக்காக உணவுப்பூர்வமாக நிற்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்நிலையி, சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நிரூபர்கள் அவரிடம், ''திரிஷாவுடன் விமானத்தில் சென்ற விஜய், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்கவில்லை என்று பலரும் குற்றம்சாட்டுகின்றனரே'' என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த சீமான், ''பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க செல்லாதது எனக்கு வருத்தமில்லை. ஏனெனில் அவர் அங்கு சென்றால் அவரை பார்க்க கூட்டம் கூடி விடும். காவல்துறையால் கட்டுப்படுத்த முடியாது.