ஒரே நொடியில், ஒரே கிளிக்கில் விடுப்பு, பணப்பலன்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு

Published : Dec 19, 2024, 12:14 PM IST

தமிழக அரசு ஊழியர்களுக்கான விடுமுறை, பணப்பலன் உள்ளிட்ட விவரங்களை கைப்பேசியில் காண புதிய திட்டம் ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இந்த மூலம் ஊழியர்கள் தங்கள் சம்பள விவரங்கள், விடுப்பு விண்ணப்பம், முன்பணம் விண்ணப்பம் போன்றவற்றை மேற்கொள்ளலாம்.

PREV
15
ஒரே நொடியில், ஒரே கிளிக்கில் விடுப்பு, பணப்பலன்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு  ஜாக்பாட் அறிவிப்பு
Tamil Nadu government

அரசு ஊழியர்களும் தமிழக அரசும்

தமிழக அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசு ஊழியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அரசு என்ன தான் திட்டம் வகுத்தாலும் பாதிக்கப்பட்ட மக்கள், கடைநிலை மக்களுக்கு சென்று சேர முக்கிய பங்கு வகிப்பது அரசு ஊழியர்கள். எனவே அரசு ஊழியர்களை நம்பித்தான் அரசே செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் படி ஊக்கத்தொகை, போனஸ், அகவிலைப்படி உயர்வு போன்றவை முறையாக செயல்படுத்தப்படுகிறது மேலும் மகப்பேறு விடுமுறையும் பெண் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

25
Kalanjiyam app

புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

இந்த நிலையில் சமூக தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் காரணமாக அரசும் தங்களை புதிய தொழில் நுட்பத்திற்கு மாற்றி வருகிறது. அதன் படி கோப்புகளை மூலம் கையாளப்பட்ட பணிகள் தற்போது கணிணிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் அரசு ஊழியர்களின் விடுமுறை, பணப்பலன் தொடர்பான நடைமுறைகளும் புதிய தொழில்நுட்பத்தில் ஒரே நொடியில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருவூலம் மற்றும் கணக்கு துறை சார்பாக  அனைத்து பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில்,

35
Tamil Nadu government employees app

ஜனவரி 1ஆம் தேதி முதல் அமல்

ஆணையர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் அறிவுறுத்தலின்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. களஞ்சியம் கைப்பேசி செயலி 01. 01. 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர இருப்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இச்செயலி மூலம், அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip, Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு. ஈட்டிய விடுப்பு முதலியவைகளும்),

45
Kalanjiyam app

விடுப்பு, சலுகை ஈசியாக பெற புதிய திட்டம்

பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி (CIF) மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் (CTS கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளலாம். ஒய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம்.  

55
government employees app

ஓய்வூதியர்களுக்கும் பயன்

Singgah Pension Slip, Pension Drawn Particulars Form 16 செய்து கொள்ளலாம். மேலும் களஞ்சியம் கைப்பேசி யெலியை Google Play Store மூலம் பதிவிறக்கம் செய்யலாம். இச்செயலி சம்பந்தமான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் (வடக்கு), சென்னை 01-யை தொடர்பு கொள்ளலாம் என  கூறப்பட்டுள்ளது.  இந்த களஞ்சியம் செயழி  தொடர்பான சுற்றறிக்கை எற்கனவே அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories