பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14,15,16ஆம் தேதிகளில் உற்சாகமாக கொண்டாடப்படவுள்ளது. இந்த பொங்கல் பண்டிகையையொட்டி தொடர்ந்து 5 நாட்கள் வரை விடுமுறை கிடைக்கவுள்ளது. இதனையடுத்து சொந்த ஊரில், கிராமங்களில் பொங்கல் கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள மக்கள் தயாராகி வருகின்றனர்.
இதற்காக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. இந்தநிலையில் பொங்கல் பரிசும் தமிழக அரசு சார்பாக நியாயவிலைக்கடைகளில் வழங்கப்படவுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 20 பொருட்களை கொண்ட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.