Savukku Shankar Arrest: சவுக்கு சங்கர் மீண்டும் கைது! என்ன காரணத்திற்காக தெரியுமா?

First Published | Dec 17, 2024, 4:27 PM IST

youtuber Savukku Shankar Arrest: யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான கஞ்சா வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சவுக்கு சங்கர் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

youtuber Savukku Shankar

அரசியல் விமர்சகரும், யூடியூப்பருமான சவுக்கு சங்கர் சமூக வலைதளத்தில் அரசியல் கட்சி தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறிப்பாக திமுக ஆட்சியையும், முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை விமர்சித்து வீடியோ வெளியிட்டு வந்தார். 

Savukku Shankar

இந்நிலையில்  ரெட் பிக்ஸ் என்கின்ற யூடியூப் தொலைக்காட்சியில் பெண் காவல்துறையினரை பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். இது தொடர்பாக பெண் காவலர்கள் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கரை மே 4ம் தேதி தேனியில் வைத்து போலீசார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் மீண்டும் கனமழை எச்சரிக்கை? இந்த 6 மாவட்டங்கள் அலறப்போகுதாம்! ! லிஸ்ட்ல சென்னையும் இருக்கா?

Tap to resize

Savukku Shankar News

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட சவுக்கு சங்கர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  இதனால் சிறையில் இருந்து வெளியே வர முடியாத சூழ்நிலைக்கு சவுக்கு சங்கர் தள்ளப்பட்டார். குண்டர் சட்டத்திற்கு கீழ் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்குண்டர் சட்டத்தை ரத்து செய்தது மட்டுமல்லாமல் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஜாமீன் வழங்கியது. 

Court Warrant

இதனிடையே கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது சவுக்கு சங்கர் ஆஜராகி வந்தார். ஆனால் கடந்த சில விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இதற்கான காரணம் குறித்து அவரது வழக்கறிஞர் மனு அளித்தார்.

இதையும் படிங்க: Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு! தமிழக அரசுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்ச நீதிமன்றம்!

Savukku Shankar Arrest

ஆனால் மனுவை நீதிபதி செங்கமலச்செல்வன் ஏற்க மறுத்ததை அடுத்து சவுக்கு சங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து விசாரணையை 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனையடுத்து யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னையில் வைத்து தேனி  போலீசார் மீண்டும் கைது செய்தனர். நீதிமன்றம் பிடிவாரண்டு பிறப்பித்த நிலையில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Latest Videos

click me!