ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரியில் தேர்தல்.? தேர்தல் ஆணையத்திற்கு சென்ற முக்கிய தகவல்

First Published | Dec 17, 2024, 1:41 PM IST

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையடுத்து, தொகுதி காலியாக உள்ளது. வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் ஈரோடு கிழக்கு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

thirumagan everaa death

தமிழகத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிப்பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அப்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவேரா,  அந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை  பெற்றவர் அப்பகுதி மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். இந்த நிலையில்தான் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் கடந்த ஆண்டு திருமகன் ஈவேரா உயிரிழந்தார். 

Evks death

இதனையடுத்து  ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். தமிழக சட்டமன்றத்தில் ஈரோடு மக்களுக்காக குரல் கொடுத்தார். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி அசத்தினார். இந்த சூழ்நிலையில் கடந்த சில வாரங்களாக உடல் நிலை பாதிக்கப்பட்டவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சனிக்கிழமை சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். 

Tap to resize

tamilnadu assembly

இதனை தொடர்ந்து அவரது உடல் அடக்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக தொடர்பான தகவல்களை தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
 

Election erode east

ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் 6 மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்த நிலையில் வரும் ஜனவரி அல்லது பிப்ரவரி மாத நடைபெற உள்ள டெல்லி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில் அந்த தேர்தலோடு சேர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 

Latest Videos

click me!