Tamilnadu government
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்
தமிழகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்து வருகிறது. அந்த வகையில் எதிர்கால தலைமுறையினர் சிறந்து விளங்குவதில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது.
இதே போல அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதிலும் அரசு ஊழியர்கள் பாலமாக இருந்து வருகிறார்கள். இதன் படி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் போட்டியை பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன் படி இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பல லட்சத்தில் பரிசுகள் வழங்கப்படவுள்ளது.
thiruvalluvar statue
திருவள்ளூவர் சிலை வெள்ளிவிழா
இதன் படி கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையில் வெள்ளி விழா ஆண்டையொட்டி தமிழக அரசு சார்பாக போட்டியானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமின்றி பொதுக்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருக்குறள் தொடர்பான தங்களது கட்டுரை, கவிதை, ஓவியம் ஆகிய தலைப்பின் கீழ் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
school teacher
வினாடி வினா போட்டி
இந்த நிலையில் அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்களுக்கு தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டுத் துறை சார்பாக போட்டியை அறிவித்துள்ளது. அதன் படி, விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர் 28ம் தேதி அன்று மாநில அளவில் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வினாடி வினா நிகழ்வு நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்விற்கு தங்கள் மாவட்டத்தில் இருந்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
school teacher competition
பல லட்சத்தில் பரிசு தொகை
இந்த போட்டியானது 3 சுற்றுக்களாக நடத்தப்படவுள்ளது. முதல்நிலை போட்டிகளில், 38 மாவட்டங்களில் எழுத்து தேர்வுகள் நடத்தப்படம் இதில் வெற்றி பெறுபவர்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 3 குழுக்களாக தேர்வு செய்யப்படுவார்கள். இதனையடுத்து விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் காலிறுதி, அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகள் நடைபெறும்.
இதில் கலந்து கொண்டு வெற்றி பெறும் குழுவிற்கு பரிசுகள் வழங்கப்படவுள்ளது. அதன் படி இறுதிப் போட்டியில் வெல்லும் முதல் குழுவிற்கு ரூ 2 லட்சம் ரூபாயும், இரண்டாம் குழுவிற்கு 1.5 லட்சம் ரூபாயும், மூன்றாம் குழுவிற்கு ஒரு லட்சமும் பரிசு தொகையாக வழங்கப்படும்.
School Teacher
அரசு ஊழியர்களுக்கு அழைப்பு
மேலும் இந்த வினாடி வினா போட்டிக்கு இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற இதர மூன்று குழுக்களுக்கும் ஊக்கப் பரிசாக 25000 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியில் அரசு, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுறியும் அனைத்துத்துறை அனைத்து நிலை அலுவலர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.