இன்றைய காலக்கட்டத்தில் தொழில்நூட்பம் வளர வளர மக்களின் வாழ்க்கை முறையும் மாறி வருகிறது. உணவு, உடை கலாசாரம் மாறி வருகிறது. இன்றைய இளைஞர்கள் நவநாகரீகம் என்ற பெயரில் ஏதேதோ செய்கிறார்கள். அதில் ஒன்று தான் டாட்டூ குத்துவது. விளையாட்டு பிரபலங்கள், சினிமா பிரபலங்களை பார்த்து இளைஞர்களும், இளம்பெண்களும் தங்களுடைய உடலில் டாட்டூ குத்துவது அதிகரித்து வருகிறது.
ஆனால் சிலர் உடலின் முகத்தை மற்ற அனைத்து பாகங்களிலும் டாட்டூ குத்திக் கொள்கின்றனர். இப்போது ஒருபடி மேலே போய் ‘பாடி மாடிஃபிகேஷன்’ என்ற பெயரில் கண்களுக்குள் டாட்டூ போட்டுக் கொள்வது, நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்துவது என ஆபத்தான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் இந்த ஆபத்தான கலாசாரம் புகுந்து திருச்சியிலும் இருவர் நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ குத்திக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.