டிச.14ல் நடந்த அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை திடீரென ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி; என்ன காரணம்?

First Published | Dec 17, 2024, 8:15 AM IST

டிசம்பர் 14ம் தேதி நடந்த‌ அரசு உதவி வழக்கறிஞர் தேர்வை டிஎன்பிஎஸ்சி ரத்து செய்துள்ளது. இதற்கான மறுதேர்வு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Exam

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்தந்த பதவிகளை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் அரசு வேலையில் சேர்ந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் டிஎன்பிஎஸ்சி மூலம் அரசு பணியிடங்களின் நியமனம் வெளிப்படையாக நடந்து வருவதால் மாநிலம் முழுவதும் பல லட்சக்கணக்கான இளைஞர்கள் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நம்பிக்கையுடன் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். 
 

TNPSC Exam Cancelled

பெரும்பாலானோர் மற்ற வேலைகளுக்கு கூட செல்லாமல் முழு நேரமாக அர்சு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகின்றனர். அண்மையில் குரூப் 2 மற்றும் 2ஏ பணிக்காக தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருந்தது.  இந்நிலையில், டிசம்பர் 14ம் தேதி நடந்த அரசு உதவி வழக்கறிஞர் பணிக்கான தேர்வை அதிரடியாக ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக  டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் லூயிஸ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. 

வெறும் ரூ.2,000 நிவாரணம்; வடமாவட்டங்களுக்கு துரோகம் செய்யும் திமுக'; அன்புமணி பாய்ச்சல்!

Tap to resize

Tamilnadu Goverment Exam

இதற்கான கணினிவழித் தேர்வு 14.12.2024 அன்று பிற்பகல் 15 மாவட்ட மையங்களில் 4186 தேர்வர்களுக்கு நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளினால் சில தேர்வர்களால் இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடமிருந்து மறுதேர்வு நடத்திட வேண்டி தேர்வாணையத்தில் கோரிக்கை பெறப்பட்டது. 

TNPSC

தேர்வர்களின் கோரிக்கையினை தேர்வாணையம் முறையாக பரிசீலனை செய்து, அதனை ஏற்று, மேற்கண்ட பதவிக்காக 14.12.2024 பிற்பகல் நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் இரத்து செய்கிறது.  மேலும், ஏற்கனவே இத்தேர்விற்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறுதேர்வு 22.02.2025 அன்று ஒளிக்குறி உணரி (OMR) முறையில் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. 

மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும், பின்னர் கனியே தேர்வாணைய இணையக்களத்தில் வெளியிடப்படும்'' என்று கூறப்பட்டுள்ளது. 

ஆவின் பால் அளவு குறைப்பா.? விற்பனை கட்டணம் அதிகரிப்பா.? தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Latest Videos

click me!