மேலும், திமுக கொடுத்த அழுத்தம் காரணமாகவே விஜய் பங்கேற்ற விழாவில் திருமாவளவன் கலந்து கொள்ளவில்லை என்று ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். திருமாவளவனை சந்தித்த அமைச்சர் எ.வ. வேலு, 'விஜய் விழாவிற்கு செல்ல வேண்டாம். நீங்கள் விழாவிற்கு சென்றால் கூட்டணிக்கு கூட்டணியில் பிரச்சனையாகிவிடும். மேலும் விஜய் விழாவில் திருமாவளவன் பங்கேற்பதை முதல்வர் ஸ்டாலினும் விரும்பவில்லை என எ.வ. வேலு திருமாவளவனிடம் தெரிவித்தார். அவரது அழுத்தம் என்று சொல்வதை விட அவருடைய கருத்தை திருமாவளவன் உள்வாங்குகிறார் என ஆதவ் அர்ஜுனா விமர்சித்திருந்தார்.