ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
நெல்லையில் தொடர் கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பருக்கு ஏற்பட்டு நெல்லை நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதக்கிறது. நெல்லை பழைய பேருந்து நிலைய பகுதிகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பேட்டை, டவுண், பாளையம்கோட்டை, புதிய பேருந்து நிலைய பகுதிகளிலும், அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், சேரன்மாகாதேவி பகுதிகளிலும் மழைநீர் பெருகியது.