TNPSC
டிஎன்பிஎஸ்சி எனும் தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஆண்டுதோறும் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றது. எப்படியாவது அரசு பணியில் சேர்ந்து விட என்பதால் குறைந்த காலி பணியிடங்களுக்கு லட்சக்கணக்கானோர் தேர்வு எழுதுகின்றனர். டிஎன்பிஎஸ்சியை பொறுத்து குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல நிலைகளில் தேர்வு நடத்தப்படுகின்றன.
TNPSC Group 2 Exam
சமீபத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2ஏ பணியில் 2,540 காலி பணியிடங்களுக்காக செப்டம்பர் 14ம் தேர்வு நடைபெற்றது. இதற்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 5.40 பேர் மட்டுமே தேர்வை எழுதினர். இந்நிலையில் தேர்வு நடைபெற்று 57 வேலை நாட்களில் முடிவுகள் வெளியாகி மாணவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி இன்ப அதிர்ச்சி கொடுத்து. இந்நிலையில் குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளின் பாடத் திட்டத்தில் டிஎன்பிஎஸ்சி முக்கிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.
TNPSC Group 2 Exam Syllabus Change
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தேர்வர்களின் நலன் கருதியும், அரசுத்துறைகளின் தேவையைக் கருத்தில் கொண்டும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு - 2 (தொகுதி 2 மற்றும் 2A பணிகள்)க்கான முதல்நிலைத் தேர்வின் பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலத்திற்கான பாடத்திட்டமும், ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு-4 (தொகுதி 4 பணிகள்)-க்கான தமிழ் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்விற்கான பாடத்திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
Exam Syllabus Change
மேலும் https://tnpsc.gov.in/tamil/syllabus.html மற்றும் https://tnpsc.gov.in/English/syllabus.html என்ற தேர்வாணைய இணையதள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.