Thirumahan Everaa
கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டார். இந்த தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். தொகுதி பணிகளிலும் சட்டப்பேரவை நிகழ்விகளிலும் ஆர்வத்துடன் பங்கேற்று வளர்ந்து தலைவராக திருமகன் ஈவெரா திகழ்ந்து வந்தார். இவர் தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.
EVKS Elangovan
இந்நிலையில் திருமகன் ஈவெரா கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இளம் வயதில் திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் 2023ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடுமா அல்லது திமுக போட்டியிடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
Sanjay Sampath
திமுக கூட்டணியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கே வாய்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து வேட்பாளராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் அல்லது அவரது இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
Erode East MLA EVKS Elangovan
ஆனால், ஈரோடு கிழக்கு தொகுதியில் நான் போட்டியிடவில்லை. தனது இளைய மகன் சஞ்சய் சம்பத்திற்கு வாய்ப்பு தருமாறு கட்சி தலைமையிடம் கோரிக்கை வைத்ததாக ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறியிருந்தார். அப்போது சென்னையில் மணப்பாக்கத்தில் உள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன் வீட்டுக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின் அரசியல் அனுபவம் மிக்க மூத்த தலைவரான நீங்கள் இடைத்தேர்தலில் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதை அடுத்து யாரும் எதிர்பாராத விதமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார். 34 ஆண்டுகளுக்கு பின் சட்டமன்றத்திற்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்தில் நுழைந்தார்.
Congress MLA EVKS Elangovan
பின்னர் கொரோனா மற்றும் நெஞ்சுவலி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பு காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் கடந்த நவம்பர் 13-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதற்கான தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதையும் படிங்க: ஈவிகேஎஸ் இளங்கோவன் எப்போதும் என்னிடம் இதை தான் சொல்லுவார்! கலங்கிய முதல்வர்!
Erode East Assembly Constituency
கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை முதல் அவரது உடல் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 10.12 மணிக்கு உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த ஆண்டு வெற்றி பெற்று திருமகன் ஈவெரா உயிரிழந்த நிலையில் அதே தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் உயிரிழந்ததால் காவு வாங்கும் ஈரோடு கிழக்கு தொகுதி என சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.