டாக்டர் ராமதாஸ் தனது 50 வருட கால உறவை வெளிப்படுத்தியுள்ளார். சுசீலாவுடன் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் அவரது அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் தற்போதைய மூத்த அரசியல் தலைவர்களில் முக்கியமானவர் டாக்டர் ராமதாஸ், அதிலும் சமீபத்தில் பெற்ற மகனுடன் ஏற்பட்ட நீயா நானா பிரச்சனையில் ராமதாஸ் சந்தித்த அரசியல் சங்கடங்கள் அவருடைய இமேஜை பல மடங்கு உயர்த்தியது,
பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை அன்புமணி தனது பக்கம் வைத்திருந்தாலும் மனம் தளராத ராமதாஸ் தொடர்ந்து 86 வயதிலும் போராட்ட குணத்தை கைவிடாமல் தன் பக்கத்தில் பலத்தையும் காட்டி அன்புமணியை தொடர்ந்து அதிர வைத்து வந்தார், இந்த நிலையில் தான் அப்பா மகனுடைய சண்டை சச்சரவு உச்சநிலையை அடைந்த போது யாரும் எதிர்பார்க்காத புதிய ட்விஸ்ட்டாக பழைய சுசீலா வெளிச்சத்திற்கு வந்துள்ளார்
24
ராமதாசின் இரண்டாவது திருமணம்
50 வருடத்திற்கு மேலாக தன்னிடம் வேலை பார்த்த சுசிலா உடனான உறவை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் டாக்டர் ராமதாஸ். திமுக முக்கிய தலைவரும் தனது சமூகத்தைச் சேர்ந்தவருமான ஜெகத்ரட்சகனின் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கால்டன் நட்சத்திர விடுதியில் சுசிலா உடனான ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடிய புகைப்படம் வெளியானது.
முதலில் இந்த படம் பொய்யானது அல்லது சித்தரிக்கப்பட்டது என பலரும் நினைத்தார்கள் அதன்பிறகு தான் மெது மெதுவாக சுசிலா மேட்டர் உண்மைதான் என்பது இறுதியில் நிரூபணம் ஆனது. டாக்டர் ராமதாஸின் மறைக்கப்பட்ட இது வெளியில் பேசப்படாத இரண்டாவது திருமணம் குறித்து சமூக வலைதளங்கள் மற்றும் பத்திரிகைகளில் செய்திகள் மீம்ஸ்கள் தீயாய் பறக்கின்றன
34
புகைப்படத்தில் அதிர்ச்சியில் ராமதாஸ்
சாதாரண மக்கள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் என இந்த புகைப்படங்களை பார்த்த அனைவரும் சற்று ஆடித்தான் போனார்கள். இது குறித்து பல நெட்டிசன்கள் கிண்டலாகவும் கேலியாகவும் பதிவிட்டு வருகின்றனர், சில பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்கள் இனி அன்புமணிக்கு ஆதரவு என்ற கருத்தையும் தெரிவித்து வருகிறார்கள்.
பாட்டாளி மக்கள் கட்சி முக்கிய தலைவர்கள் பலருக்கும் இந்த விஷயம் ஆரம்பம் முதலில் தெரிந்து இருந்தாலும் வெளி உலகத்திற்கு இது புதிது தான். இந்த விவகாரம் குறித்து தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களோ அல்லது டாக்டர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்க்கும் அரசியல் கட்சித் தலைவர்களோ வாயை திறக்கவில்லை என்பது தான் ஹைலைட்.
மற்றொரு பக்கம் இந்த விவகாரம் மெது மெதுவாக சூடு பிடித்தாலும் போராட்ட குணத்தின் மூலமாகவும் சமூக நீதியை காப்பாற்ற தொடர்ந்து இடைவிடாது செயல்பட்டு வந்ததாலும் உச்சத்தில் இருந்த ராமதாஸின் புகழ் தற்போது வேறு சமூகத்தைச் சேர்ந்த பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார் என்ற புதிய தகவல் அவரது பொலிட்டிக்கல் மற்றும் தனிப்பட்ட இமேஜை மளமளவென சரித்து கீழே தள்ளி உள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.