இந்த முறையும் சைக்கிள் மட்டும் ஓட்டிட்டு வராதீங்க; ஏதாவது முதலீட்டோட வாங்க - ஸ்டாலினை வறுத்தெடுக்கும் ஈபிஎஸ்

Published : Aug 30, 2025, 06:08 PM IST

முதல்வர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடு செல்லவில்லை. மாறாக அவரது குடும்பத்திற்காக முதலீடு செய்யவே வெளிநாடுகளுக்கு சென்றிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

PREV
14
5வது முறையாக வெளிநாடு செல்லும் முதல்வர்

அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கிறேன் என்று பதவியேற்ற 40 மாதங்களில் 4 முறை வெளிநாடுகளுக்கு குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஸ்டாலின், இந்தியாவில் மற்ற மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஈர்த்த முதலீட்டை விட மிக மிகக் குறைவான முதலீட்டைக் கொண்டு வந்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஆட்சி முடிவடைய இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில், இன்று 5ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது உண்மையிலேயே ஸ்டாலின் தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கச் செல்கிறாரா? அல்லது முதலீடு செய்வதற்கு செல்கிறாரா என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

24
வெறும் 36 ஒப்பந்தங்கள் மட்டுமே

தெலங்கானா மற்றும் கர்நாடகா முதலீடுகளை ஈர்த்ததாகவும் செய்திகள் வந்துள்ளன. ஆனால் ஸ்டாலின் மார்ச் 2022ல் துபாய்க்கு குடும்ப சுற்றுலா, மே மாதம் 2023ல் சிங்கப்பூர், 2024ல் அமெரிக்கா, னஎ மொத்தம் 40 நாட்கள் வெளிநாட்டு சற்றுப்பயணத்தில் சுமார் ரூ.18 ஆயிரம் கோடி மட்டுமே முதலீடாக ஈர்க்கப்பட்டுள்ளது. இதிலும், பெரும்பாலான முதலீட்டு ஒப்பந்தங்கள் தமிழகத்தில் தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்காக போடப்பட்டவை.

தமிழக அரசின் இன்றைய பத்திரிகை செய்தியின் அடிப்படையில் 2021 முதல் இன்று வரை சுமார் 922 புரிந்துணைர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலானவை எங்கள் ஆட்சியில் போடப்பட்ட தொழில் முதலீடுகளின் தொடர்ச்சியே. 4 முறை வெளிநாடு சென்று இவர் சாதித்ததாக மார்தட்டிக் கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வெறும் 36 மட்டுமே. நான் முதல்வராக இருந்தபோது 2019ம் ஆண்டு ஒருமுறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும்.

34
ரூ.1100 கோடியில் கால்நடை ஆராய்ச்சி நிலையம்

ஸ்டாலின், நான் வெளிநாடு சென்று வந்ததைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். எனது வெளிநாட்டுப் பயணத்தின் மூலம் தொழில் முதலீடுகளை ஈர்த்தது மட்டுமல்ல, அங்குள்ள கால்நடை பண்ணை மற்றும் கால்நடை வளர்ப்பு உள்ளிட்டவற்றை நேரடியாகப் பார்வையிட்டு அதுபோன்றதொரு கால்நடை ஆராய்ச்சி நிலையத்தை சேலத்தில் ரூ.1100 கோடி மதிப்பீட்டில் உருவாக்கி காட்டினேன். அதனை அழிக்கும் முயற்சியில் பொம்மை முதல்வர் ஸ்டாலின் ஈடுபட்டு வருகிறார்.

44
4 முறை வெளிநாடு சென்றும் எந்த பயனும் இல்லை!

ஸ்டாலின் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்கு சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில் துறையினரின் கருத்து. எனவே ஸ்டாலின், இன்று 5ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஓட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல் இந்த முறை அதை தவிர்த்து தமிழகத்திற்கு தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories